கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இரண்டாம் கட்டப் பணியை ஆகஸ்ட் 5 முதல் தொடங்கிய சென்னை மாநகராட்சி, பொதுமக்களுக்காக உதவி எண்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம், குடும்பத் தலைவிகள் மாதம்தோறும் 1,000 ரூபாய் பெறுவதற்கு விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இரண்டாம் கட்டப் பணியை ஆகஸ்ட் 5 முதல் தொடங்கிய சென்னை மாநகராட்சி, உதவி எண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விண்ணப்பங்களை அளிக்காதவர்கள், மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 பெறுவது எப்படி என்று உதவுவதற்கு சென்னை மாநகராட்சி, உதவி எண்களின் பட்டியலை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்துடன் இணைக்கும் ஹெல்ப்லைன் எண்கள்: 044-25619208 (லேண்ட்லைன்), 9445477205 (WhatsApp) மற்றும் 1913 (அழைப்பு மையம்) எண்களை அறிவித்துள்ளது.
மண்டல வாரியாக உதவி எண்கள்: 9445190201 (திருவொற்றியூர்), 044-25941079 (மணலி), 9445190203 (மாதவரம்), 9445190204 (தண்டையார்பேட்டை), 9445190205 (ராயபுரம் 9445190205) திரு.வி.க நகர்), 9445190207 / 044-26257880 (அம்பத்தூர்)
9445190208 (அண்ணா நகர்), 9445190209 (தேனாம்பேட்டை), 9445190210 (கோடம்பாக்கம்), 9445191432 (வளசரவாக்கம்), 9445190212 (ஆலந்தூர்), 9445190213 (அடையாறு), 9445190214 (பெருங்குடி), 9445190215 (சோழிங்கநல்லூர்) என மண்டல வாரியாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு வீடு வீடாகச் சென்று படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், உதவிக்காக மொத்தம் 1,781 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்கள் பெறுவது ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”