கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பங்களை சரி பார்க்கும் கள ஆய்வு தொடங்கி உள்ளது. வீட்டின் மின்சார பயன்பாடு குறித்து சரியான விவரங்கள் கேட்டு பெறப்படுகிறது என்று கூறியுள்ளனர்.
குடும்பத்தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15ம் தேதியில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
விண்ணப்பங்களின் உண்மை தன்மை குறித்து இதற்காக நியமிக்கபட்ட தன்னார்வலர்கள் மற்றும் கல்லிவுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று சரிபார்த்து வருகின்றனர்.
வசிக்கும் வீடு சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்றும், என்ன வேலை பார்க்கிறார்கள்? என்ன வாகனம் வைத்திருக்கிறார்கள்? வருமானம் தொடர்பான விவரங்கள் கேட்டறிந்து சரிபார்க்கப்படுகிறது.
மேலும் மின்சார பயன்பாடு குறித்த விவரங்களும் சரிபார்க்கப்படுகிறது. அதிக விண்ணப்பங்களில் மின்சார பயன்பாடு பற்றி குறிப்பிடப்படாமல் உள்ளதால், அது குறித்து நேரடியாக கள ஆய்வு செய்யப்படுகிறது. இந்நிலையில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளின் முதல் பட்டியல் இந்த மாத இறுதிக்குள் தயாரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“