வீடியோ: கொள்ளுப்பேரனுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி தன் கொள்ளுப்பேரனுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

திமுக தலைவர் கருணாநிதி தன் கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வயது முதிர்ச்சி, உடல் நலமின்மை காரணமாக கடந்த ஓராண்டாக தீவிர அரசியலிலிருந்து விலகியுள்ளார் கருணாநிதி. எனினும், அவ்வப்போது அவரது உடல்நலம் தேறிவருவதை உணர்த்தும் வகையில், வீடியோக்கள் இணையத்தளங்களில் வைரலாகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முரசொலி அலுவலகம், அறிவாலயம், சிஐடி காலனி இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்றார் கருணாநிதி. அதேபோல், கோபாலபுரம் இல்லத்து வாசலில் இருந்தபடியே தொண்டர்களுக்கு ஒருமுறை கையசைத்தார். மேலும், தன் கொள்ளுப்பேரனை கண்டு சிரிக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு சமீபத்தில் குடும்பத்தினருடன் தந்தையைக் காண சென்றிருந்தார். அப்போது, அவரது பேரன் மகிழன் மட்டையை பிடித்துக்கொண்டிருக்க, கருணாநிதி பந்தை வீசி முகத்தில் சிரிப்புடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. அருகில், மு.க.தமிழரசு, அவரது மனைவி, கருணாநிதியின் மகள் செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த வீடியோவால் உற்சாகமடைந்துள்ள திமுக தொண்டர்கள், அதனை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close