Kalaingar Magalir Urimai Thogai: தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டமாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து, தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. அதே நேரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, மகளிர் உரிமை தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அக்டோபர் மாதம் பிறந்துவிட்டால் மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு பெண்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஒருநாள் முன்னதாக அக்.14ஆம் தேதியே வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த மாதம் 14ம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்படும். அக்.15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14ஆம் தேதியே வங்கிகளில் பணத்தை செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“