சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளையின் நடன பயிற்றுவிப்பாளர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், அதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நிலையில், முன்னாள் மாணவியின் புகாரின் பேரில் நடன ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: சென்னை மின்சார ரயில் நேர மாற்றம்; இன்று முதல் அமல்- விவரங்கள் இதோ!
மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த நிறுவனத்தில் படிக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருவரையும் மேலும் மூன்று ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவர்களில் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், “இப்போதைக்கு” போராட்டத்தை கைவிடுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி கூறுகையில், இது தொடர்பாக மாணவிகளிடம் முன்பு விசாரணை நடத்தியதாகவும் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil