scorecardresearch

கலாஷேத்திரா விவகாரம்: விசாரணைக் குழுவை மாற்றியமைக்க உயர்நீதிமன்றம் முடிவு

பாலியல் புகாரை விசாரிக்க கலா‌ஷேத்திராவில் அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கலாஷேத்திரா

பாலியல் புகாரை விசாரிக்க கலா‌ஷேத்திராவில் அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை கலாஷேத்ராவில், ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. மேலும் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார்.

கலாக்‌ஷேத்திராவில் பயிலும் மாணவிகள் 7 பேர் உயர்நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நேற்று விசரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபானி கூறுகையில் “ பாலியல் புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவை மாற்றியமைக்க வேண்டும். மாணவிகள் மற்றும் கலாக்‌ஷேத்திரா நிறுவனத்தின் விருப்பங்களை கருத்தில் எடுத்துக்கொண்டு இந்த மாற்றம் தேவைப்படுகிறது. இதற்கு தகுதியான நபர் எனக்கு தெரியும். இந்நிலையில் மனுதாரர்கள் விரும்பினால் அவர்களும் மாற்றியமைக்கப்படும் குழுவில் யார் இடம் பெற வேண்டும் என்று பரிந்துரை செய்யலாம்” என்று கூறினார்.

கலாஷேத்ரா சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், ‘சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், புகாரளித்த மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கலாஷேத்ரா நடவடிக்கையில் மாணவிகள் திருப்தியடையவில்லை எனவும், நிறுவனத்தின் பெயரை காப்பாற்ற விசாரணைக் குழுவை உயர்நீதிமன்றம் ஏன் நியமிக்க கூடாது என விளக்கம் அளிக்குபடி கலாஷேத்ராவிற்கு உத்தரவிட்டார்.

சமந்தபட்ட மாணவிகளின் அடையாளத்தை வெளிபடுத்தக்கூடாது பாதிக்கப்பட்ட மாணவிகள், சாட்சியாக உள்ள மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது, பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்கள், மாணவிகளுடன் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும் விசாரணை ஏப்ரல் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kalakshetra internal committee to be reconstructed madras high court

Best of Express