தமிழ்நாடு முழுவதிலும் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அவர்களுக்கு வலுவூட்டுவதற்கும், இலங்கைத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் திட்டத்தை மாநில மறுவாழ்வு மற்றும் குடியுரிமை பெறாதோர் நலத்துறை தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு 'கலங்கரை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து, புனர்வாழ்வு மற்றும் குடியுரிமை பெறாதோர் நலத் துறை ஆணையர் பி கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளுடன் இணைந்து மறுவாழ்வு நலத் துறை ஆணையர் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கான ஒரு நாள் தொழில் வழிகாட்டுதல் திட்டத்தை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் உள்ள 103 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சுமார் 57,772 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர்.
இந்த ஆண்டு, முகாம்களில் இருந்து சுமார் 2,250 மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 29 மாவட்ட மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“