பான்-இந்தியா ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் 2019-இல் கலாநிதி மாறன் 43வது இடத்தையும் தமிழ்நாடு அளவில் பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.
பான்-இந்தியா ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் 2019, செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் 43வது இடத்தைப் பிடித்துள்ளார். ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா பணக்காரப் பட்டியல் 2019-இல் தமிழகத்தில் மாநில அளவில் ரூ.19,000 கோடி மதிப்புடன் சன் நெட்வொர்க் ஊடகத்தின் தலைவர் கலாநிதி மாறன் முதலிடத்தில் உள்ளார்.
சன் டிவி நெட்வொர்க் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களை இயக்குகிறது. இந்தியா முழுவதும் எஃப்எம் பன்பலையை ஒளிபரப்புகிறது. ஐபிஎல்-லின் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் உரிமையை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கலாநிதி மாறனுக்கு அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் ஜோஹோவின் வேம்பு ராதா (ரூ.9,900 கோடி) வேம்பு சேகர் (ரூ.7,300 கோடி) உள்ளனர்.
ஹுருன் ரிப்போர்ட் இந்தியா மற்றும் ஐஐஎஃப்எல் வெல்த் ஆகியவை 2019 ஆம் ஆண்டின் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பணக்கார தமிழர்கள் பற்றிய பகுப்பாய்வை செவ்வாய்க் கிழமை று வெளியிட்டது. தேசிய பட்டியலில் ஐந்து நபர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணக்கார தமிழர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,38,400 கோடியாக உள்ளது.
மாநிலத்தில் இருந்து பில்லியனர்களின் எண்ணிக்கை (டாலர்களில்) ஒன்று முதல் ஐந்து வரை உயர்ந்துள்ளது. ஜோஹோ, போதிஸ் மற்றும் ஹட்சன் அக்ரோ ஆகியோர் தமிழகத்திற்கு புதிய கோடீஸ்வரர்களாக பங்களித்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமல்கமேஷன்ஸ் குழு மாநிலத்தின் ஒரு அமைப்பிலிருந்து அதிக எண்ணிக்கையில் ஆறு முதல் தனிநபர்களை பங்களித்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டில் 62% நபர்களுக்கு சென்னை விருப்பமான வசிப்பது விருப்பத் தேர்வாக உள்ளது. மேலும், இந்த பட்டியலில் மாநிலத்தைச் சேர்ந்த ஏழு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல, பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 3% அதிகரித்துள்ளது.
ரூ.7,100 கோடி சொத்துக்களுடன், சடையாண்டி மூப்பனார் மற்றும் போத்திஸ் குடும்பத்தினர் மாநிலத்தில் நான்காவது இடத்திலும், தேசிய அளவில் 125 வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில், சென்னையிலிருந்து 34 பேர்களும், கோயம்புத்தூரிலிருந்து 12 பேர்களும், திருப்பூரிலிருந்து 4 பேர்களும் சேலத்தைச் சேர்ந்த 3 பேர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டுப் பணக்காரர்களில் 16% ஜவுளி துறையிலும் பின்னர் ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரி பாகங்களை தயாரிப்பதில் உள்ளனர்.
ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2019-இல் பான்-இந்தியா பதிப்பில், 41 தொழில்களில் 953 நபர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டிற்கான ஒட்டுமொத்த சொத்து 2% அதிகரித்துள்ளது. சராசரி சொத்து 11% சரிவைக் காட்டுகிறது. இந்த ஆண்டின் பட்டியலில் சுமார் 344 நபர்கள் அல்லது மூன்றில் ஒரு பகுதியினர் சொத்துக் குறைவை சந்தித்துள்ளனர். மேலும், 112 பேர் 1,000 கோடி ரூபாயைக் ஈட்டத் தவறிவிட்டனர் - இது கடந்த ஆண்டின் பட்டியலில் கிட்டத்தட்ட பாதி ஆகும். இருப்பினும், ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2016 முதல் இந்த பட்டியலில் உள்ள நபர்களின் எண்ணிக்கை 181% அதிகரித்துள்ளது.