scorecardresearch

பாலியல் புகார்: மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்; கலாஷேத்ரா கல்லூரி ஏப். 6 வரை மூட உத்தரவு

சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில், ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் ஏப்ரல் 6ம் தேதி கல்லூரியை மூட உத்தரவிட்டுள்ளது.

Tamil News
Tamil News Updates

சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில், ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் ஏப்ரல் 6ம் தேதி கல்லூரியை மூட உத்தரவிட்டுள்ளது.

சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக அக்கல்லூரியின் முன்னாள் இயக்குநர், சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இதைத் தொடர்ந்து, கலாஷேத்ராவில் ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்தது குறித்து, விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்குமாறு தமிழக டி.ஜி.பி-க்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, இந்த புகார் குறித்து விசாரணை நடத்து மாறு சென்னை காவல் ஆணையருக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். டி.ஜி.பி உத்தரவின் பேரில் அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் ஆசிரியர் மீது எழுந்துள்ள பாலியல் புகார் குறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், கலாஷேத்ரா கல்லூரி ஆசிரியரின் மீதான பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலாஷேர்த்ரா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கல்லூரியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடர்ந்து, கல்லூரியை வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை மூட கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்லூரி விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் 2 நாட்களுக்கு காலி செய்யவும் உத்தரவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kalashetra college closed until april 6 due to student protest against sexual harrasement