கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் தொடர்பான பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், தன்னை குறித்து அவறுதாறு கருத்து தெரிவித்த யூடியூபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தாயார் செல்வி டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நிகழ்ந்ததில் இருந்து மாணவிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் மாணவிக்கு ஆதரவாக சிலரும், பள்ளிக்கு ஆதரவாக சிலரும் தங்களது கருத்துக்களை யூடியூப் தளத்தில் வீடியோவாகவும் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே மாணவி தற்கொலை தான் செய்துகொண்டார் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் குறித்து ஸ்ரீமதியின் பெற்றோர் கூறி வருகின்றனர்.
மேலும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஸ்ரீமதியின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறி வரும் நிலையில், தன்னைப்பற்றி ‘தி கே டிவி’ யூடியூப் சேனலை நடத்தி வரும் கார்த்திக் ஆர் பிள்ளை என்ற யூடியூபர் அவதூரான கருத்தக்களை பதிவிட்டு வருவதாக ஸ்ரீமதியின் தாயார் செல்வி டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், தனது மகள் 9-ம் வகுப்பு படிக்கும் வரை ஜி என்ற இன்சில் இருந்ததாகவும், அதன்பிறகு அதை ஆர் என்று மாற்றம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது மகளை அற்ப காரணங்களுக்காக கொடூரமாக அடித்ததாகவும் கூறியுள்ளார். மாணவி தற்கொலை செய்து கொண்டதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த சில நாட்களுக்குப் பிறகு வெளியான இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..
எனவே தன்னைப்பற்றியும் தனது மகள் பற்றியும் அவதூறாக பேசிய யூடியூபர் அதற்கு தகுந்த ஆதாரத்தை கொடுக்க வேண்டும் என்றும், ஸ்ரீமதியின் பிறப்பு கல்வி மற்றும் பிற சான்றிதழ்களையும் காண்பித்துள்ளார். இதனால் தன்னைப்பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த யூடியூபர் கார்த்திக்கை கைது செய்யவும், அவரது சேனலை முடக்கவும், சர்ச்சைக்குரிய வீடியோக்கள் அனைத்தையும் நீக்கவும் டிஜிபியிடம் கேட்டுக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.
மேலும் தனது மகளின் மரணம் குறித்து.”சிபி-சிஐடி அதிகாரிகள் தன்னிடம் ஒருமுறை மட்டுமே விசாரித்ததாகவும் செல்வி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil