/tamil-ie/media/media_files/uploads/2019/02/a680.jpg)
Kallakurichi Aiadmk MP Kamaraj car accident - விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கள்ளக்குறிச்சி அதிமுக எம்.பி. காமராஜ்
சேலம் வாழப்பாடி அருகே உள்ள மின்னாம்பள்ளியில் அரசு விழாவுக்கு வந்த கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கள்ளக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்பி காமராஜ் இன்று சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்கே எதிர்பாராதவிதமாக டூ-வீலர் ஒன்று குறுக்கே வர, அதன் மீது மோதாமல் இருக்க, காரை திருப்பிய போது, டயர் வெடித்து அருகிலிருந்த தடுப்புச் சுவரில் மோதி கார் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் எம்.பி.காமராஜ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து உடனடியாக அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கையில் மட்டும் அவருக்கு சிறு காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு, எம்.பி.காமராஜ் உடனடியாக வீடு திரும்பினார்.
முன்னதாக, விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன், நேற்று(பிப்.23) அதிகாலை நடந்த கார் விபத்தில் பலியான நிலையில், இன்று கள்ளக்குறிச்சி எம்.பி. காமராஜின் காரும் விபத்தில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.