கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம், விஷச்சாராயம் குடித்து 69 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கள்ளக்குறிச்சி சாராய வழக்கை சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றி உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தால் அதன் விசாரணை முடிய காலதாமதம் ஆகும் என்றும் தமிழ்நாடு காவல்துறையே விசாரணையை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மனுதாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பில் சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“