கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து பலியாணவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தி.மு.க அரசை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தி.மு.க-வின் பேச்சு என்னவானது என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் கிராமத்தில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்து திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர், 50-க்கும் மேற்பட்டோர் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிசியில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் விற்பனையைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர், எஸ்.பி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், அமைச்சர்கள், எ.வ. வேலு, மா. சுப்ரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவியும், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதி உதவியை முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், கள்ளக்குறிச்சியில் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குடித்து ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் தொடர்பாக தி.மு.க அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, உள்ளிட்டோர் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, இந்த சம்பவம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் அலட்சியமே காரணம் என்று விமர்சித்து கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, விஷச் சாராயம் குடித்து பலியாணவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தி.மு.க அரசை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தி.மு.க-வின் பேச்சு என்னவானது என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“