கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். ஆனால் அவரிடமிருந்து தலா 180 மில்லி 11 மதுபாட்டில்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டதால் கோவிந்தராஜ் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.
கோவிந்தராஜ் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருபவர் என்பதால், அவர் கைது செய்யப்படுவது புதிதல்ல. கோவிந்தராஜ் இதற்கு முன்பும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இருப்பினும், உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக கோவிந்தராஜ் பிடிபட்டது இதுவே முதல் முறை என்று TOI செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கில் கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா மற்றும் மற்றொரு நபர் தாமோதிரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் அருந்திய மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்வராயன் மலையில் உள்ள கிராமங்களில் இருந்து கோவிந்தராஜுக்கு சில்லறை விற்பனை செய்ததில் மேலும் இரு சந்தேக நபர்களான விடியூர் ராஜா மற்றும் சின்னதுரை ஆகியோருக்கு பங்கு இருப்பதாக விசாரணைக் குழு சந்தேகித்துள்ளது.
மூத்த குடிமக்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் மட்டுமே சில்லறை விற்பனையில் ஈடுபடுகின்றனர், எனவே போலீசார் கடுமையான விசாரணை முறைகளை கடைப்பிடிக்க முடியாது மற்றும் அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரில் தாமோத்திரன் உடல் ஊனமுற்றவர், கோவிந்தராஜ் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்களைப் பொறுத்தவரை, அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் கள்ளக்குறிச்சியில் பணியமர்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அடுத்த வாரம் தங்கள் அசல் அதிகார வரம்பிற்கு திரும்ப வேண்டிய நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுவிலக்கு காவல்துறை குழு கடந்த மூன்று மாதங்களில் 80,000 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தது மற்றும் வெங்கடேசன், காமராஜ் மற்றும் விஜயா ஆகிய மூன்று பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள வெங்கடேசன் மற்றும் காமராஜ் ஆகியோர் கல்வராயன் மலையில் இருந்து கள்ளச்சாராயத்தைக் கொண்டு வரும் நிலையில், விஜயா விற்பனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“