மாநிலத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 10 மாவட்டங்களில் 466 கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 68 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழக போலீஸ் துறையின் வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் மண்டலத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 10 மாவட்டங்களில் 466 கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 98 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் 77, கடலூர் 71, செங்கல்பட்டு 56, ராணிப்பேட்டை 44, திருப்பத்தூர் 41, வேலூர் 33, காஞ்சிபுரம் 21, கள்ளக்குறிச்சி 13, திருவள்ளூரில் 12 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன..
இது குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘கள்ளச்சாரய வியாபாரிகளை பதிவு செய்து கைது செய்யவும், அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவும் மண்டலத்தில் உள்ள மாவட்ட எஸ்பிகளுக்கு ஐஜி (வட மண்டலம்) ஆஸ்ரா கர்க் உத்தரவிட்டார். அதன்படி கள்ளச்சாரய வியாபாரிகள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர், என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“