கள்ளக்குறிச்சி பகுதியில், கள்ளச்சாராயம் குடித்து 100-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 50 பேர் மரணமடைந்துள்ளர்.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லாரி மருத்துவமனை, சேலம், விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கள்ளச்சாராயம் குறித்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் வகையில், முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை 11 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.
பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்ப்போது பேசிய அவர், தமிழக அரசு ஏழை மக்கள் மீது அக்கரை இல்லாத அரசாக ஆக உள்ளது என்றும் இந்த சம்பவத்தில் ஆளும் கட்சிக்கு தொடர்பு இருக்கிறது என்றும் கூறினார். மேலும் நேற்று உதயநிதி ஸ்டாலிம் , நடிகர் விஜய் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் கள்ளக்கறிச்சி விஷ சாராய சமவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சேர்ந்த வீராசாமி (40) என்பவர் சற்றுமுன் உயிரிழந்தார். இதனால் உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி 28 பேர், சேலம் 15 பேர், விழுப்புரம் 4 பேர், புதுச்சேரி ஜிப்மர் -3 என மொத்தம் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 88 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.