கள்ளக்குறிச்சியில் விசச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் விவகாரம் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் வீடு வீடாக சென்று மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று மருத்தவக்குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே விஷச்சாராயம் குடித்தவர்களின் உடல் நிலை எப்படி உள்ளது என மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்து வருகிறது. 8 மருத்துவர்கள் குழு கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று உடல் நல பாதிப்புள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விஷச்சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மருத்துவமனையில் ஆபத்தான் நிலையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரின் நிலை முன்னேறி உள்ளது. கள்ளச்சாராயம் புழக்கம் இருந்த 20 இடங்களில் மருத்துவ குழுவினர் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.