Advertisment

Kallakurichi Hooch Tragedy Deaths Live Updates: கள்ளக்குறிச்சி சம்பவம்: ஜூன் 26 -இல் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

Kallakurichi Hooch Tragedy Deaths Live Updates: கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kallakurichi illicit liquor death toll

Kallakurichi Hooch Tragedy Deaths Live Updates

Kallakurichi Hooch Tragedy Deaths Live Updates:கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Advertisment

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய் உள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர். இதனிடையே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஏ.வ.வேலு, மா.சுப்பிரமணியம்  ஆகியோர் நேற்று  கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வை மேற்கொண்ட அமைச்சர்களின் குழு இன்று முதலமைச்சர் ஸ்டாலைனை சந்திக்க உள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில், ஜோசஃப் ராஜா என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரவை 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று ஜோசப் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளது என்று  காவல்துறை தெரிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jun 22, 2024 07:03 IST
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரம் பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று இரவு நிலவரப்படி மொத்தம் 184 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.



  • Jun 21, 2024 21:47 IST
    கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு:  பெண் கைது  - சி.பி.சி.ஐ.டி போலீசார் நடவடிக்கை

    கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். இவர் சட்டவிரோதமாக சாராயத்தை சப்ளை செய்து வந்தது அம்பலமாகியுள்ளது. இதுவரை இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Jun 21, 2024 21:03 IST
    ஒய்வு பெற்றதற்கு காரணம் கள்ளச்சாராய கும்பலின் மிரட்டலா? கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி மறுப்பு

    கள்ளச்சாராய கும்பலின் மிரட்டல் காரணமாக, விருப்பு ஓய்வு பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி மோகன்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். சொந்தக் காரணத்திற்காக விருப்ப ஓய்வு பெற்றதாக வீடியோ வெளியிட்டுள்ளார்



  • Jun 21, 2024 20:14 IST
    கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்; பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது



  • Jun 21, 2024 19:30 IST
    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் 50 ஆக உயர்வு

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர், சேலம், விழுப்புரம் மருத்துவமனைகளில் 135 பேர் சிகிச்சையில் உள்ளனர். 



  • Jun 21, 2024 18:57 IST
    மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவால் ஜாமின் நிறுத்திவைப்பு

    மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. முன்னதாக, கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தது. இதை எதிர்த்து டெல்லி அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்து இருந்தது.



  • Jun 21, 2024 18:54 IST
    கலெக்டர்களுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, விஷ சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசித்தார்.



  • Jun 21, 2024 18:33 IST
    கள்ளக்குறிச்சி: சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல்

    கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற சாட்டை துரைமுருகன் மீது ஆளுங்கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.



  • Jun 21, 2024 18:28 IST
    கள்ளக்குறிச்சி விவகாரம்: பா.ம.க ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    கள்ளக்குறிச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி  தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பாமக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம். சி.பி.ஐ விசாரணை வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவோம் இல்லையெனில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.
    கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் இல்லையெனில் இந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு மற்றும்  மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பதவி விலக வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி சமய்சிங் மீனா, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.



  • Jun 21, 2024 18:14 IST
    தமிழ்நாடு டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு; கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் கடந்த ஆண்டை விட ரூ.1734.54 கோடி அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 



  • Jun 21, 2024 18:10 IST
    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்; மேலும் அதிகரிக்க வாய்ப்பு

    புதுச்சேரியில் பேட்டியளித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 17 பேரில் 3-க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. டயலிசிஸ் செய்யப்பட்டுள்ள 10 பேரில் 4 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக உள்ளனர்” என்றனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.



  • Jun 21, 2024 17:14 IST
    168 பேர் பாதிப்பு; ஆபத்தான நிலையில்  9 பேர்; புதுச்சேரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

    “கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் திருநங்கை, பெண்கள்  உட்பட 168 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மருத்துவமனைகளில் இருந்து கூடுதல் மருத்துவர்கள் கள்ளக்குறிச்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    சம்பவத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைக்கு வர தயங்கியதும் உயிரிழப்புகளுக்கு காரணம். ஜிப்மர் மருத்துவமனையில் 8 பேர் நிலையாகவும், 9 பேர் ஆபத்தான நிலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    ‘Omeprazole’ மாத்திரையின் கையிருப்பு 4 கோடி இருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு சரி அல்ல” என்று  கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரை நலம் விசாரித்த பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 



  • Jun 21, 2024 17:11 IST
    தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாலை நேர நிகழ்வுகள் தொடக்கம் 

    வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் நலன் துறை உள்ளிட்ட துறைகளில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதற்கு துறை அமைச்சர்கள் முத்துசாமி, கீதாஜீவன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளனர். 



  • Jun 21, 2024 17:06 IST
    புதுச்சேரி: நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்ததார் 



  • Jun 21, 2024 17:05 IST
     கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் எதிரொலி: தலைமை செயலாளர் அவசர ஆலோசனை

    கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன்  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சற்று நேரத்தில் ஆலோசனை நடத்துகிறார். 



  • Jun 21, 2024 15:28 IST
    எதிர்கட்சியினர் மலிவான அரசியல் செய்கிறார்கள் : மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

    சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவுற்றதும் கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றிப் பேசப்படும் என்பதை அறிந்தே, வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர். முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னவர்களுக்குஎங்கும் ஓடி ஒளியாமல் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ளேன். அவையில் இருந்து கேட்க மனமில்லாமல் அரசியல் ஆதாயங்களுக்காக வெளியேறியவர்கள் இந்தக் காணொளியைக் காணட்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளர்.



  • Jun 21, 2024 15:18 IST
    விஷ சாராய சம்பவம் எதிரொலி : சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம்

    கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை தொடர்ந்து மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. விதிகளை மீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆல்கஹால், எத்தனாலை மூலப்பொருளாகக் கொண்ட ஸ்பிரிட், சானிடைசர், ஹேண்ட் வாஸ் ஆகியவற்றை முறைப்படி விற்க வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள 37,000 மருந்து கடைகளுக்கும் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.



  • Jun 21, 2024 14:37 IST
    பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    பெற்றோரை இழந்த குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான செலவை தமிழக அரசே ஏற்கும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு டெபாசிட் செய்யப்படும். மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் 18 வயது வரை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வைப்பு நிதி செலுத்தப்படும்  என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Jun 21, 2024 14:35 IST
    பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், மலைவாழ் மக்களுக்கான திட்டங்களை அவர்களிடம் கொண்டு செல்வது கிடையாது. வாழ்வாதாரத்திற்கு வழியில்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர் என கூறியுள்ளார்.



  • Jun 21, 2024 13:50 IST
    திருமாவளவன் நேரில் ஆறுதல்

    கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்.

    விசிக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ₹10,000 நிவாரண நிதியாக வழங்கினார்



  • Jun 21, 2024 13:45 IST
    குடித்து பார்த்து வாங்கப்பட்ட மெத்தனால்

    ஜூன் 17ல் மாதேஷ் என்பவரிடம் இருந்து மெத்தனாலை சின்னதுரை வாங்கியுள்ளார். கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜின் சகோதரர் தாமோதரன் சின்னத்துரையிடம் இருந்து மெத்தனாலை குடித்துப் பார்த்து வாங்கியுள்ளார்.         

    மெத்தனாலை குடித்துப் பார்த்து விட்டு கெட்டுப் போய்விட்டதாக கோவிந்தராஜன் மற்றும் சின்னத்துரையிடம் தாமோதரன் கூறியுள்ளார்.

    உயர்தர சரக்கு எனக்கூறி விற்பனை செய்யுங்கள் என்று கோவிந்தராஜன் மற்றும் தாமோதரனிடம் மெத்தனாலை சின்னத்துரை விற்பனை செய்துள்ளார்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் வெளிவந்த தகவல்கள்



  • Jun 21, 2024 13:27 IST
    விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோட்டம்

    விஷ சாராயம் அருந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் தப்பியோட்டம்.

    மருத்துவமனையில் போலீசார் விசாரணை. தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்

    சிகிச்சை பெற்று வந்த நபர் தப்பியோட்டம்



  • Jun 21, 2024 12:55 IST
    முதலமைச்சர் என்கிற முறையில் கள்ளக்குறிச்சி பிரச்னையில் பொறுப்போடு பதில் அளித்து கொண்டு இருக்கிறேன்

    பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம்  வைப்பு நிதியாக வழங்கப்படும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு பாதுகாவலர் பராமரிப்பில் வளர 18 வயது நிறைவடையும் வரை மாதம் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    முதலமைச்சர் என்கிற முறையில் கள்ளக்குறிச்சி பிரச்னையில் பொறுப்போடு பதில் அளித்து கொண்டு இருக்கிறேன். திறந்த மனதோடு இரும்பு கரம் கொண்டு  குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன்.

    அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர்கள், உயர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதை மக்கள் மறந்துவிடவில்லை

    - சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



  • Jun 21, 2024 12:39 IST
    மு.க.ஸ்டாலின் பதில்

    விஷச் சாராயம் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயத்தை விற்றவர்களிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப் பட்டுள்ளது.

    விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டில் இருந்து 57 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்மருந்துகள் தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கி, பயன்படுத்தப்பட்டு வருகின்றன

    சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்திற்கு மு.க.ஸ்டாலின் பதில்



  • Jun 21, 2024 12:24 IST
    கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: ஸ்டாலின்

    கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதிமுக ஆட்சியில் விஷ சாராய உயிரிழப்புகள் நடந்த போது உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை

    அதிமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவத்தின் போது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக கேள்வி வரும் என்பதற்காக அதிமுகவினர் திட்டமிட்டே அவை விதிமுறைகளை மீறி நடந்து கொண்டனர்

    - முதலமைச்சர் ஸ்டாலின்                 



  • Jun 21, 2024 12:21 IST
    எங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மெத்தனால் வருகிறது?

    கல்வராயன் மலைப்பகுதியில் காலம் காலமாக நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே இது போல மெத்தனால் குடித்து உயிரிழந்தார்கள்.

    எங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மெத்தனால் வருகிறது என காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்லவில்லை. திமுக அரசு கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி இருக்கிறது

    - சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உரை



  • Jun 21, 2024 12:20 IST
    இதுப்போன்ற கடைகள் இருப்பது காவல்துறையினருக்கு தெரியாதா?

    கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்திற்கு விலை மதிக்க முடியாத உயிரிழப்புகள் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் காவல் நிலையம் அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுப்போன்ற கடைகள் இருப்பது காவல்துறையினருக்கு தெரியாதா?

    கள்ளக்குறிச்சி சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பெரியார், அண்ணா வழியில் நாங்களும்  தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்துகிறோம்

    சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி உரை



  • Jun 21, 2024 12:19 IST
    சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உரை

    கள்ளக்குறிச்சி சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத பேரிழப்பு. சில சமூக விரோதிகள் சமூக விரோத செயல்களை செய்கின்றனர்.

    பஞ்சாயத்து தலைவர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரும் கூட்டுப் பொறுப்பு எடுத்து இது போன்ற சட்ட விரோத செயல்களை தடுக்க வேண்டும்.

    - சட்டப்பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உரை



  • Jun 21, 2024 12:04 IST
    பாஜக வெளிநடப்பு

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தனர். முன்னதாக அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு  செய்திருந்தனர்.



  • Jun 21, 2024 11:47 IST
    கள்ளக்குறிச்சி விவகாரம்: தமிழ்நாடு அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



  • Jun 21, 2024 11:46 IST
    கள்ளக்குறிச்சி 40 குடும்பங்களுக்கும் அரசு திட்டங்களில் முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

    கள்ளக்குறிச்சி சசம்பவத்தில் உயிரிழப்புகளை சந்தித்த 40 குடும்பங்களுக்கும் அரசு திட்டங்களில் முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்; சுய உதவிக்குழுக்கள் மூலம் கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி இது போன்ற சம்பவங்களை தவிர்க்க வேண்டும்” - சட்டப்பேரவையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உரை



  • Jun 21, 2024 11:28 IST
    கள்ளாக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் : அவை நிகழ்வில் பங்கேற்கவில்லை என அ.தி.மு.க அறிவிப்பு

    அவை நிகழ்வில் பங்கேற்கவில்லை என அ.தி.மு.க அறிவிப்பு சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 



  • Jun 21, 2024 11:26 IST
    அ.தி.மு.கவினர் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தியால் வெளியேற்றப்பட்டார்கள் : ஸ்டாலின்

    கள்ளக்குறிச்சி சம்பவம் என் கவனத்திற்கு வந்தது, நடவடிக்கை எடுத்துள்ளேன்; அ.தி.மு.கவினர் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றம் செய்து பேரவை விதிகளுக்கும், மரபுகளுக்கும் மாறாக குழப்பம் ஏற்படுத்தியதால் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை



  • Jun 21, 2024 11:24 IST
    எதிர்க்கட்சியினருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ரத்து: அப்பாவு

    கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பேச வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எதிர்க்கட்சியினருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ரத்து செய்து வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் பேரவைக்கு வர உத்தரவிடுகிறேன்- சட்டப்பேரவை தலைவர் அப்பாவு



  • Jun 21, 2024 11:21 IST
    மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்கட்சித்தலைவரும் கலந்து கொள்ள வேண்டும்: ஸ்டாலின்

    எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்; மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்கட்சித்தலைவரும் கலந்து கொள்ள வேண்டும்- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை



  • Jun 21, 2024 11:15 IST
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் : இ.பி.எஸ்

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறோம். தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கண்டு கொள்ளவில்லை; மக்களை பற்றி கவலைப்படாத கூட்டணி கட்சிகள்; திமுக அரசுக்கு கூட்டணி கட்சியினர் துணை போகிறார்கள். இ.பி.எஸ் 



  • Jun 21, 2024 11:12 IST
    கள்ளச்சாரயம் குறித்து மார்ச் 29 கவன ஈருப்பு தீர்மனம் கொண்டுவர முயற்சித்தோம்: அது நடந்திருந்தால் இந்த நிலை இன்று வந்திருக்காது: இ.பி.எஸ்

    அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் வேலு கள்ளச்சாராயம் தொடர்பாக தகவல் கிடைத்திருந்தால் தடுத்து இருப்போம் என சொல்கிறார்ஆனால் எங்கள் கட்சி எம்.எல்.செந்தில்குமார் கடந்தாண்டு மார்ச் 29ம் தேதி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை வைத்தார் அதை ஏற்க வில்லைஅதை கவனித்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்து இருக்கலாம்எடப்பாடி பழனிசாமி பேட்டி, 



  • Jun 21, 2024 11:12 IST
    பேரவை தலைவர் அப்பாவு கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து எங்களை பேசவிடவில்லை: இ.பி.எஸ்

    எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை; பேரவை தலைவர் அப்பாவு கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து எங்களை பேசவிடவில்லை;கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய சிகிச்சை அளிக்கவில்லை- இ.பி.எஸ் பேட்டி



  • Jun 21, 2024 11:12 IST
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் 50 பேர் உயிரிழந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது: இ.பி.எஸ்

    எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது;சிகிச்சை பெற்று வரும் மீதமுள்ள 16 பேரும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளன- சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி. 



  • Jun 21, 2024 11:11 IST
    சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு: 30 பேர் கவலைக்கிடம்

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



  • Jun 21, 2024 11:07 IST
    சபாநாயகர் உத்தரவு: அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து வெளியேற்றம்

    அவைக் காவலர்களை கொண்டு அமளியில் ஈடுபடுபவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு.  அதிமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றி வரும் அவைக் காவலர்கள்.  சபாநாயகரின் எச்சரிக்கையை மீறி தொடர் அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றி நடவடிக்கை



  • Jun 21, 2024 11:07 IST
    விஷச் சாராய விவகாரம்: பா.ஜ.க. கவன ஈர்ப்பு தீர்மானம்

    கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க பா.ஜ.க கவன ஈர்ப்பு தீர்மானம் தமிழகம் முழுவதும் விஷ சாராய விற்பனையை முழுவதுமாக தடை செய்வது குறித்து விவாதிக்க கோரிக்கை . மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து விவாதிக்க அனுமதி கோரி சபாநாயகருக்கு கடிதம்.  "தமிழகத்தில் பூரண மது விலக்கு சாத்தியமில்லை" தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர சாத்தியம் இல்லை மதுக்கடைகளுக்கு பிறகு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை . 



  • Jun 21, 2024 11:07 IST
    அ.தி.மு.கவினர் தொடர்ந்து அமளி

    விஷச் சாராய மரண விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அ.தி.மு.கவினர் முழக்கம்.  அ.தி.மு.கவினர் அமளி . சபாநாயகர் எச்சரிக்கை அதிமுக உறுப்பினர்களின் அமளியால் சட்டப்பேரவையில் குழப்பம். அவையில் அமைதியாக அமராவிட்டால் நடவடிக்கை எடுப்பேன் . சபாநாயகர் அப்பாவு சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம்



  • Jun 21, 2024 09:09 IST
    30 பேர் நிலை கவலைக்கிடம்

    விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களில் 30 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது - மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்



  • Jun 21, 2024 08:46 IST
    மேலும் ஒருவர் கைது

    கள்ளக்குறிச்சி பகுதியில், கள்ளச்சாராயம் குடித்து 100-க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 49 பேர் மரணமடைந்துள்ளர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய   மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Jun 21, 2024 07:43 IST
    உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு. நாகப்பிள்ளை, ராஜா, பாலு, சோலைமுத்து உள்ளிட்ட மேலும் 7 பேர் உயிரிழப்பு. கள்ளக்குறிச்சி- 27 பேரும், சேலம் - 15 பேரும், விழுப்புரம் - 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் - 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழப்பு மேலும் 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விஷச் சாராயம் - பலி எண்ணிக்கை 49ஆக உயர்வு.



  • Jun 21, 2024 07:42 IST
    புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேர் கவலைக்கிடம்

    கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேர் கவலைக்கிடம் . நேற்று முன்தினம் 19 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3பேர் அன்று மாலையே உயிரிழந்தனர் . தொடர்ந்து 16 பேர் ஜிப்மர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் 10 பேர் வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் மற்ற 6 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தகவல் விஷச் சாராயம் - ஜிப்மரில் 6 பேர் கவலைக்கிடம்.



  • Jun 20, 2024 21:22 IST
    கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரிக்கை; அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

    விஷச் சாராய வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அப்பாவி மக்கள் உயிர் பலிக்கு காரணமான அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டுமென கடிதத்தில்  அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். காவல்துறைக்கு தெரிந்தே, பகிரங்கமாக விஷ சாராய விற்பனை நடைபெற்றதாகவும் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். குற்றவாளிகள் மீது தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்காது என பா.ஜ.க கருதுகிறது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



  • Jun 20, 2024 21:16 IST
    மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம்!

    மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருணுக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பி. செந்தில் குமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



  • Jun 20, 2024 21:04 IST
    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை த.வெ.க தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் நடிகர் விஜய் கேட்டறிந்தார்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment