கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 இறந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாசில்தார்கள் இரவோடு இரவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாறுதல் குறித்து எந்தவித மேல்முறையீடோ, விண்ணப்பமோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. புதிய பணியிடத்தில் உடனடியாக சேரவில்லை எனில் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அடிப்படை விதி 108 மற்றும் அரசு கடித எண் 53280 வருவாய் (பணி1) 05.05.2006-ன்படி பணியேற்பு காலத்திற்கு பின்னர் பணியில் சேராத காலம் ஊதியமில்லா அசாதாரண விடுப்பாக அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இவர்கள் சேலம் முண்டியம்பாக்கம் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 19 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மாறுதலான தாசில்தார் விவரம் வருமாறு.
எஸ்.சசிகலா, வன நிர்ணய அலுவலர், கள்ளக்குறிச்சி
பி.கோபாலக்கிருஷ்ணன், வருவாய் வட்டாட்சியர், சங்கராபுரம் வட்டம்.
ஏ.சத்தியநாராயணன், தனி வட்டாட்சியர்(ச.பா.தி) சங்கராபுரம்.
எல், அனந்தகிருஷ்ணன், தனிவட்டாட்சியர்(ஆ.தி.ந), கள்ளக்குறிச்சி
ஜெ.விஜயபிரபாகரன், வருவாய் வட்டாட்சியர், சங்கராபுரம் வட்டம்
தனி வட்டாட்சியர்(ச.பா.தி) சங்கராபுரம். தனி வட்டாட்சியர்(ஆ.தி.ந), கள்ளக்குறிச்சி
கோபாலக்கிருஷ்ணன்
சத்தியநாராயணன்,
வீபாலகுரு, தனி வட்டாட்சியர்(பே.மே), கள்ளக்குறிச்சி.
ஜி.குமரன், வருவாய் வட்டாட்சியர், அலுவலக மேலாளர்(பொது)
அனந்தசயனன், வாணாபுரம், கள்ளக்குறிச்சி
ஜெகமலக்கண்ணன், வருவாய் வட்டாட்சியர், சின்னசேலம்
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“