கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார சின்னம்

வரலாற்று சிறப்புமிக்க கல்லணை அணைக்கான நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரையினை இந்திய அஞ்சல் துறை ஆகஸ்ட் 15, 2025 அன்று தோகூர் துணை அஞ்சல் அலுவலகத்தில் தொடங்கியது.

வரலாற்று சிறப்புமிக்க கல்லணை அணைக்கான நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரையினை இந்திய அஞ்சல் துறை ஆகஸ்ட் 15, 2025 அன்று தோகூர் துணை அஞ்சல் அலுவலகத்தில் தொடங்கியது.

author-image
WebDesk
New Update
kallanai ppc

கல்லணையின் சித்தரிப்பு இந்த சிறப்பு அஞ்சல் முத்திரையில் இடம் பெற்றுள்ளது.

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ஜலால், ரமேஷ், முகமது சுபேர், சிவக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

Advertisment

செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்து பேசுகையில், வரலாற்று சிறப்புமிக்க கல்லணை அணைக்கான நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரையினை  இந்திய அஞ்சல் துறை ஆகஸ்ட் 15, 2025 அன்று தோகூர் துணை அஞ்சல் அலுவலகத்தில் தொடங்கியது. தென்னிந்தியாவின் டெல்டா பகுதியில் ஒரு பண்டைய பொறியியல் கட்டுமான தொழில்நுட்பம் மற்றும் ஒரு முக்கிய நீர்ப்பாசன அமைப்பாக அதன் முக்கியத்துவத்தைக் கொண்டாடும் வகையில், கல்லணையின் சித்தரிப்பு இந்த சிறப்பு அஞ்சல் முத்திரையில் இடம் பெற்றுள்ளது. 

kallanai ppc 3

இந்த முத்திரை அணையின் பாரம்பரியத்தை உலக அளவில் அஞ்சல் அமைப்பு மூலம் ஊக்குவிக்க உதவுகிறது. நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை (PPC) என்பது ஒரு வரலாற்று தளம், ஒரு கலாச்சார சின்னம் அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த   சிறப்பு அஞ்சல் முத்திரை ஆகும்.

Advertisment
Advertisements

கல்லணை அணைக்கட்டு, சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்டது. கல்லணையின் வரலாறு மற்றும் கட்டிடக்கலை முக்கியத்துவத்தை நினைவு கூறவும், அதைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவும் உதவுகிறது. சுற்றுலா மற்றும் பாரம்பரியத்தை ஊக்குவிக்கிறது.

kallanai ppc 2

கல்லணையின் நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரையினை கடிதங்களில்  பொறிப்பதன் மூலம், பண்டைய அணையின் கதையை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறது. தபால் தலை சேகரிப்பை ஆதரிக்கிறது. தபால் தலை சேகரிப்பாளர்கள் மற்றும் தபால் தலை சேகரிப்பாளர்களுக்கு இந்தியாவின் பொறியியல் பாரம்பரியத்துடன் இணைக்கிறது என்றார் . முன்னதாக பொருளாளர் தாமோதரன் வரவேற்க, நிறைவாக சந்திரசேகரன் நன்றி கூறினார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Tiruchirapalli

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: