/indian-express-tamil/media/media_files/nqg5ls5ThDgswy1hdWOa.jpg)
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.
Sanatana Dharma: திமுகவின் வளர்ந்துவரும் தலைவரும், தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்த கருத்துக்காக வேட்டையாடப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை (செப்.22) தெரிவித்தார்.
ம.நீ.ம கட்சி கூட்டத்தில் உரையாற்றிய கமல், உதயநிதி, பாஜக அல்லது வேறு எந்த அமைப்பின் பெயரையும் குறிப்பிடாமல், சனாதன தர்மத்தைப் பற்றி பேசியதால் இன்று ஒரு “சிறு குழந்தை” குறிவைக்கப்படுகிறது என்றார்.
சனாதன தர்மம் குறித்து அமைச்சரின் கருத்து ஒன்றும் புதிதல்ல என்பதை சுட்டிக்காட்டிய நடிகர், திராவிட இயக்கத்தின் தலைவர்களான உதயநிதியின் தாத்தா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி போன்றவர்களும் இதைப் பற்றி கடந்த காலங்களில் பேசியுள்ளனர் என்றார்.
Kamal Haasan backs Udhayanidhi Stalin, says minister being ‘hounded’ for remark on Sanatana Dharma
மேலும், தன்னைப் போன்றவர்கள் சனாதனம் என்ற வார்த்தையைப் புரிந்துகொண்டது பெரியாரால்தான் என்றார். தொடர்ந்து, பெரியார் கோவிலின் நிர்வாகியாக இருந்தும், காசியில் பூஜைகள் செய்திருந்தாலும், அதையெல்லாம் துறந்து, தன் வாழ்நாள் முழுவதையும் மக்கள் சேவைக்காக அர்ப்பணித்தவர் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
இதுமட்டுமின்றி பெரியார் தங்களுக்கு மட்டுமே சொந்தமானவர் என்று ஆளும் தி.மு.க.வும், வேறு எந்தக் கட்சியும் கூற முடியாது; தமிழகம் முழுவதும் அவரைத் தலைவராகக் கொண்டாட வேண்டும் என்றும், பெரியாரை போற்றியவர்களில் தானும் ஒருவன் என்றும் கூறினார்.
2024 லோக்சபா தேர்தல் குறித்து பேசிய அவர், பாஜக வசதிக்கேற்ப தேர்தலை முன்கூட்டி கூட நடத்தலாம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.