கமலின் சர்ச்சைக் கருத்திற்கு பதில் அளிக்க விருப்பமில்லை – முதல்வர்

இதுவரை இவ்விவகாரத்தில் நடந்தவை என்ன என்பதை இந்த இணைப்பில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்

Kamal Haasan Campaign Nathuram Godse Controversial Remark Live Updates : அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை அன்று இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சார வேலையில் ஈடுபட்டு வருகின்றார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அவர் “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்ஸே. அவர் ஒரு இந்து” என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பதட்டம் நிலவி வருகிறது. கருத்து மோதல்களால் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. பாஜக தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, இல கணேசன் உள்ளிட்டோர் கமலின் கருத்தினை வன்மையாக கண்டித்தனர். மேலும் பாஜகவினரால், நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும் வழக்குகள் மற்றும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் படிக்க : கமல் பேசிய விவகாரத்தை விவாதிக்க கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

Live Blog

கடந்த ஞாயிற்றுக் கிழமை கமல் வெளியிட்ட சர்ச்சைக் கருத்தால் தொடர்ந்து நிலவும் பதட்டமான சூழ்நிலை.

14:49 (IST)17 May 2019
வருணாசிரமத்தை புகுத்தும் அனைவரும் தீவிரவாதிகள் தான் - டி.கே.எஸ் இளங்கோவன்

கோட்ஸே குறித்த கமலின் கருத்து, தற்போதைய சூழலுக்கு முற்றிலும் தேவையற்றது. இது குறித்து திமுக கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வருணாசிரமத்தை புகுத்தும் அனைவரும் தீவிரவாதிகள் தான் என்று திமுக தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

13:24 (IST)17 May 2019
கமலின் சர்ச்சை பேச்சு தொடர்பான விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்

அரவக்குறிச்சி தொகுதியில் கமல் ஹாசன் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம் என்று தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

12:24 (IST)17 May 2019
கமலின் சர்ச்சைக் கருத்து குறித்து பேச விரும்பவில்லை - எடப்பாடி பழனிசாமி

நீதிமன்றம் கமலின் சர்ச்சைக் கருத்து குறித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதால் அது குறித்து கூற விருப்பம் இல்லை. அனைத்து கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றினால் நலம் என்று மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

10:39 (IST)17 May 2019
எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு கமலுக்கு ஏன் அழைப்பு இல்லை - விளக்கிய கே.எஸ். அழகிரி

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன் எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு மய்யத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறியிருந்தார். அதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி பதில் அளித்துள்ளார். எம்.பிக்களை பெறப்போகும் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்தோம். அதனால் தான் கமலுக்கு அழைப்பு இல்லை என்றார்.

மேலும் கமலின் கருத்திற்கு மாற்றுக் கருத்து தெரிவிக்கலாம் ஆனால் வன்முறையில் யாரும் இறங்கக் கூடாது. அதை ஒரு போதும் காங்கிரஸ் அனுமதிக்காது என்றார்.

09:36 (IST)17 May 2019
பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு இல்லை

டெல்லியில் மே மாதம் 23ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் மூத்த உறுப்பினருமான சோனியா காந்தி, பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய போது அழைப்பு ஏதும் வரவில்லை என்று கமல் ஹாசன் கூறியுள்ளார். 

09:34 (IST)17 May 2019
இந்துக்கள் மனம் புண் பட்டிருந்தால் என்று கேட்ட போது ?

மக்கள் இந்துக்கள் யார், ஆர்.எஸ்.எஸ் யார் என்று பிரித்துப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

09:33 (IST)17 May 2019
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து குறித்த கமலின் பதில் என்ன?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கோட்ஸேவின் கருத்தைக் கூறிய கமல் ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறினார். இது குறித்து கேள்வி எழுப்பிய போது, அது அவருடைய குணாம்சியத்தையே காட்டுகிறது என்று பதில் கூறினார் கமல். 

09:31 (IST)17 May 2019
இது ஜனநாயக நாடு ... அனைவருக்கும் தனிப்பட்ட கருத்துண்டு

தமிழகத்தில் இருக்கும் இதர கட்சியினரோ, திரையுலகில் இருக்கும் நண்பர்களோ உங்களின் கருத்திற்கு ஆதரவு அளிக்கவில்லையே என்று கேள்வி கேட்டதிற்கு இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு என்று அவர் கூறியுள்ளார். 

09:28 (IST)17 May 2019
மோடியின் கருத்திற்கு நான் பதில் அளிக்க வேண்டியதில்லை... சரித்திரம் பதில் சொல்லும்

கோட்சே குறித்த கமல் ஹாசனின் சர்ச்சைக் கருத்து குறித்து பேசிய மோடி, இந்துக்கள் தீவிரவாதிகள் கிடையாது. தீவிரவாதிகள் யாரும் இந்துவாக இருக்க இயலாது என்று கூறினார். இது குறித்து கேள்வி எழுப்பிய போது, மோடியின் கருத்திற்கு நான் பதில் அளிக்க வேண்டியதில்லை. சரித்திரம் பதில் அளிக்கும் என்று கமல் குறிப்பிட்டார். தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தினால் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர் என்றும் அவர் கூறீயுள்ளார். 

09:21 (IST)17 May 2019
மோடியின் கருத்துக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை

கமல் ஹாசனின் கருத்திற்கு பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார். எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியில்லை. தீவிரவாதியாக இருக்கும் எவரும் இந்துவாக இருக்க இயலாது என்று கூறினார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, மோடியின் கருத்துக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சரித்திரம் பதில் அளிக்கும் என்று பதில் கூறியுள்ளார் கமல் ஹாசன்.

09:21 (IST)17 May 2019
மோடியின் கருத்துக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை

கமல் ஹாசனின் கருத்திற்கு பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார். எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியில்லை. தீவிரவாதியாக இருக்கும் எவரும் இந்துவாக இருக்க இயலாது என்று கூறினார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, மோடியின் கருத்துக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சரித்திரம் பதில் அளிக்கும் என்று பதில் கூறியுள்ளார் கமல் ஹாசன்.

09:07 (IST)17 May 2019
ஒரே விசயத்தை ஐந்தாறு முறை பேச முடியாது

திருச்சி விமானநிலையத்தில் இருந்து சென்னை வர இருந்த கமல் ஹாசனை செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் ஒரே விசயத்தை ஐந்தாறு முறை பேச இயலாது. சென்னைக்கு சென்றவுடன் உங்களின் குடும்பம் மீண்டும் என்னை சந்திக்கும். நான் அங்கு சென்று அவர்களிடத்தில் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

08:57 (IST)17 May 2019
கமல் ஹாசன் ட்வீட்

ஆர்பாட்டக் கூட்டம் நம்மை வன்முறைக்கு இழுக்கும். நாம் பொறுமை காக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடக்கூடாது. இது நம் உண்மைக்கு ஏற்பட்ட அக்னிபரீட்சை என்று ட்வீட் வெளியிட்டுள்ளார் கமல் ஹாசன். 

செவ்வாய் கிழமையன்று (14/05/2019) பாஜக செய்தித் தொடர்பாளரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், கமல் ஹாசனுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

தேர்தல் நலனுக்காக சிறுபான்மையினர் இருக்கும் பகுதியில் மத ரீதியாலான பிரச்சாரத்தை கமல் ஹாசன் மேற்கொண்டிருக்கிறார். எனவே 5 நாட்கள் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டார்.

இணந்த வழக்கினை விசாரித்த எஸ்.சிஸ்தானி மற்றும் கோதி சிங் அடங்கிய அமர்வு புதன்கிழமையன்று (15/05/2019) விசாரணை செய்தது. அதில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் அவர் பேசியுள்ளார் எனவே தேர்தல் ஆணையத்திடமும், தமிழகத்திலும் தானே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி மனுவை விசாரிக்க இயலாது என்று மறுவித்துவிட்டனர்.

×Close
×Close