கமலின் சர்ச்சை பேச்சு : கருத்து கூற மறுத்துவிட்ட ரஜினிகாந்த்... அரசியல் களத்தில் நீடிக்கும் பரபரப்பு!

கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை - மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை - மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal Haasan Controversial Speech

Kamal Haasan Controversial Speech

Kamal Haasan Controversial Speech : தமிழகத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல்கள் வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களும் வாக்கு சேகரிப்பிலும், பிரச்சாரத்திலும் பிஸியாக உள்ளனர்.

Advertisment

12ம் தேதி மாலை அரவக்குறிச்சி தொகுதியில் மய்யம் சார்பாக நிற்கும் மோகன்ராஜ் என்ற வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் அவர் கூறினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைகள் நிலவி வருகிறது.

Kamal Haasan Controversial Speech

Advertisment
Advertisements

திராவிடர் கழக தலைவர் வீரமணி ”கமல் பேசியதில் தவறொன்றும் இல்லை” என்று கூறினார். ஆனால் பாஜக தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, மற்றும் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய், பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான விமர்சனத்தை கமல் மேல் வைத்தனர்.

பொன். ராதாகிருஷ்ணன் கருத்து

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன் சரித்திரத்தை சரியாக படிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் காந்தியின் கொலை விவகாரத்தில் மதச்சாயம் பூசியுள்ளார் என்றும், இவர் ஏன் இவ்வாறு பேசினார் என்று புரியவில்லை என்றும் கூறினார் அவர். தமிழக மக்களால் இப்படியான ஒரு அரசியல்வாதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே போன்று நடிகர் ரஜினிகாந்திடம், கமல்ஹாசனின் கருத்து குறித்து கேள்விகள் கேட்ட போது “நான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று கூறிவிட்டார்.

மேலும் படிக்க : சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து : கமல் பேச்சால் சர்ச்சை

Kamal Haasan Rajini Kanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: