கன்னடம் மொழி தமிழிலிருந்து பிறந்தது என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு, கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னையில் அண்மையில் நடைபெற்ற 'தக் லைஃப்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசுகையில், கன்னடம் மொழி தமிழிலிருந்து பிறந்தது என்று கூறினார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா, அம்மாநில அமைச்சர் சிவராஜ் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கமல்ஹாசனின் கருத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்புகள் பெலகாவி, மைசூர், பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. பெலகாவி உள்ளிட்ட சில இடங்களில் கமல்ஹாசனின் சுவரொட்டிகளை எரித்து, அவருக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டு தனது கருத்தைத் திரும்பப் பெறாவிட்டால், அவருடைய தக் லைஃப் படம் கர்நாடகாவில் ஓடாது என்று எச்சரிக்கை தெரிவித்தார்.
கன்னட மொழியை அவமதித்த நடிகர் கமல்ஹான் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பா.ஜ.க தலைவர் விஜயேந்திர எடியூரப்பா வலியுறுத்தினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது அவருக்கு (கமல்ஹாசன்) தெரியாது.” என்று கூறினார்.
இந்நிலையில், “கன்னட மொழியை அவமதிக்கும் நோக்கம் இல்லை, தமிழ்நாடு என்பது மேனன், ரெட்டி, தமிழர் மற்றும் கன்னடிக ஐயங்கார் உள்ளிட்ட பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் முதலமைச்சர்களாகப் பணியாற்றிய மாநிலம்" என்று கமல்ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கன்னட மொழி குறித்த கருத்து குறித்து வெளியிட்டுள்ள விளக்கத்தில், அரசியல்வாதிகள் மொழியை பற்றி பேச தகுதியற்றவர்கள். எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றையே நான் சொன்னேன்.
இந்த பிரச்னையையும் தக் லைஃப்பையும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். அரசியல்வாதிகள் மொழியை பற்றி பேச தகுதியற்றவர்கள் ஏனெனில் அவர்களுக்கு இதுபற்றிய போதிய படிப்பினை இல்லை; இது எனக்கும் பொருந்தும். எனவே, இப்பிரச்னை பற்றிய ஆழமான கருத்துகளை வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள், தொல்லியல் நிபுணர்களிடம் விட்டுவிடுவோம். இது என் பதில் அல்ல, விளக்கம். அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது. தமிழ்நாடு என்பது மேனன், ரெட்டி, தமிழர் மற்றும் கன்னடிக ஐயங்கார் உள்ளிட்ட பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் முதலமைச்சர்களாகப் பணியாற்றிய மாநிலம்.இது மாநிலத்தின் அனைவரையும் அரவணைக்கும் தன்மையை எடுத்துக் காட்டுகிறது. மொழியியல் அடையாளங்களைச் சுற்றியுள்ள உணர்திறனை ஒப்புக்கொண்டு, அரசியல்வாதிகள், தான் உட்பட, மொழி விஷயங்களில் சரியான தகுதி இல்லாமல் பேசக்கூடாது” என்று கமல்ஹாசன் கூறினார்.
கமல்ஹாசனின் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக, வி.சி.க தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தமது கருத்துகளை வெளிப்படுத்தினர்.
அவமரியாதை செய்யும் நோக்கம் கிடையாது; கன்னட மொழி சர்ச்சையை அடுத்து நடிகர் கமல்ஹாசன் விளக்கம்
கன்னடம் மொழி தமிழிலிருந்து பிறந்தது என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, அம்மாநில பா.ஜ.க தலைவர் விஜயேந்திர எடியூரப்பா உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னையில் அண்மையில் நடைபெற்ற 'தக் லைஃப்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசுகையில், கன்னடம் மொழி தமிழிலிருந்து பிறந்தது என்று கூறினார். Image Source: x/ ikamalhaasan
கன்னடம் மொழி தமிழிலிருந்து பிறந்தது என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு, கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னையில் அண்மையில் நடைபெற்ற 'தக் லைஃப்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசுகையில், கன்னடம் மொழி தமிழிலிருந்து பிறந்தது என்று கூறினார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா, அம்மாநில அமைச்சர் சிவராஜ் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கமல்ஹாசனின் கருத்துக்கு எதிராக பல்வேறு கன்னட அமைப்புகள் பெலகாவி, மைசூர், பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. பெலகாவி உள்ளிட்ட சில இடங்களில் கமல்ஹாசனின் சுவரொட்டிகளை எரித்து, அவருக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டு தனது கருத்தைத் திரும்பப் பெறாவிட்டால், அவருடைய தக் லைஃப் படம் கர்நாடகாவில் ஓடாது என்று எச்சரிக்கை தெரிவித்தார்.
கன்னட மொழியை அவமதித்த நடிகர் கமல்ஹான் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பா.ஜ.க தலைவர் விஜயேந்திர எடியூரப்பா வலியுறுத்தினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழிக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. அது அவருக்கு (கமல்ஹாசன்) தெரியாது.” என்று கூறினார்.
இந்நிலையில், “கன்னட மொழியை அவமதிக்கும் நோக்கம் இல்லை, தமிழ்நாடு என்பது மேனன், ரெட்டி, தமிழர் மற்றும் கன்னடிக ஐயங்கார் உள்ளிட்ட பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் முதலமைச்சர்களாகப் பணியாற்றிய மாநிலம்" என்று கமல்ஹாசன் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கன்னட மொழி குறித்த கருத்து குறித்து வெளியிட்டுள்ள விளக்கத்தில், அரசியல்வாதிகள் மொழியை பற்றி பேச தகுதியற்றவர்கள். எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றையே நான் சொன்னேன்.
இந்த பிரச்னையையும் தக் லைஃப்பையும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். அரசியல்வாதிகள் மொழியை பற்றி பேச தகுதியற்றவர்கள் ஏனெனில் அவர்களுக்கு இதுபற்றிய போதிய படிப்பினை இல்லை; இது எனக்கும் பொருந்தும். எனவே, இப்பிரச்னை பற்றிய ஆழமான கருத்துகளை வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள், தொல்லியல் நிபுணர்களிடம் விட்டுவிடுவோம். இது என் பதில் அல்ல, விளக்கம். அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது. தமிழ்நாடு என்பது மேனன், ரெட்டி, தமிழர் மற்றும் கன்னடிக ஐயங்கார் உள்ளிட்ட பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் முதலமைச்சர்களாகப் பணியாற்றிய மாநிலம்.இது மாநிலத்தின் அனைவரையும் அரவணைக்கும் தன்மையை எடுத்துக் காட்டுகிறது. மொழியியல் அடையாளங்களைச் சுற்றியுள்ள உணர்திறனை ஒப்புக்கொண்டு, அரசியல்வாதிகள், தான் உட்பட, மொழி விஷயங்களில் சரியான தகுதி இல்லாமல் பேசக்கூடாது” என்று கமல்ஹாசன் கூறினார்.
கமல்ஹாசனின் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக, வி.சி.க தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தமது கருத்துகளை வெளிப்படுத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.