/indian-express-tamil/media/media_files/BigK9DMDHdMRDulRD2iA.jpg)
MK Stalin Wishes Kamal Hassan
மக்கள் நீதி மய்யம் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து X பக்கத்தில் அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் @ikamalhaasan அவர்கள் மீண்டும் @maiamofficial கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் - அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்! pic.twitter.com/bOEfXYx5l5
— M.K.Stalin (@mkstalin) September 21, 2024
’பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றி வரும் கமல்ஹாசன் மீண்டும் மநீம தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதற்கும், அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில்1,414 பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராக கமல் ஹாசனை மீண்டும் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீப்ரியா தீர்மானத்தை முன்மொழிய, ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு. @mkstalin அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.
— Kamal Haasan (@ikamalhaasan) September 21, 2024
நாம் சந்தித்தபோது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பையும், கடைப்பிடிக்கும் ஒழுங்கையும் உளமாற பாராட்டினீர்கள். உங்களது… https://t.co/GQzis2wSCO
இதனிடையே, ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. நாம் சந்தித்தபோது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பையும், கடைப்பிடிக்கும் ஒழுங்கையும் உளமாற பாராட்டினீர்கள். உங்களது பாராட்டுகளை இன்று நடந்த பொதுக்குழுவில் எங்கள் தொண்டர்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டேன். மக்கள் நலன்களுக்கான நமது நட்புப் பயணம் தொடரட்டும்’, என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.