நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கீழடி மாதிரியை பரிசளித்து பேசியுள்ளார்.
மேலும், கீழடி குறித்தும் தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன், 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்து பிரசாரம் மேற்கொண்டார். கூட்டணி ஒப்பந்தப்படி, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், தி.மு.க ஆதரவுடன் மாநிலங்களவை உறுபினராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்த்தொடர்ந்து, கடந்த ஜூலை 25-ம் தேதி கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், கமல்ஹாசன் எம்.பி மரியாதை நிமித்தமாக பிரதமரைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாகத் தெரிவித்துள்ளார். அதில் முக்கியமாக கீழடி குறித்தும் தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடியை சந்தித்தபோது கமல்ஹாசன் கீழடி மாதிரியை பரிசளித்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.
தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.