/indian-express-tamil/media/media_files/Bhh1vVlW3t5rMxBLKRlP.jpg)
தி.மு.க-விற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு
க.சண்முகவடிவேல்
Kamal Haasan | Trichy: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதற்கட்டமாக தமிழ்நாடு- புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வருகிற 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது.
இந்நிலையில், தி.மு.க-விற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "இந்தியாவில் செங்கோட்டை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆகியவற்றை விட மூத்தது திருச்சி மலைக்கோட்டை. அது இன்று தி.மு.க-வின் கோட்டையாக உள்ளது. நாட்டை காக்கும் இந்த வேள்வியில் நானும் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திருச்சியில் நடந்த இந்த முதல் பிரச்சார பொதுக்கூட்டம் இந்தியாவுக்கே திருப்புமுனையாக இருக்கும்" என்று கூறினார்.
முதலமைச்சர் பேசியது குறித்தான கேள்விக்கு, 'அது மிகையான வார்த்தை அல்ல. நேர்மையான நம்பிக்கை' என கமல்ஹாசன் பதில் அளித்தார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.