/tamil-ie/media/media_files/uploads/2022/09/Kamalhassan.jpg)
கோயம்புத்தூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர்க கமல்ஹாசன் (கோப்பு காட்சி).
கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அப்பகுதிக்கு கழிப்பிடம் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தார்.
கோவை உக்கடம் அருகே உள்ள கெம்பட்டி காலனி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற்றார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியில் பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அவர் அப்பகுதியில் உள்ள மேடையில் நின்று பொதுமக்களிடம் உரையாற்றினார்.
அதில் அவர் பேசும்போது, “கோவை கெம்பட்டி காலனி பகுதியில் 800 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால் இப்பகுதியில் கழிவறை இல்லை. 1 கழிவறை தான் இருக்கிறது.
ஆகவே கழிவறை நாங்கள் கட்டிதருகிறோம். தேர்தல் வாக்குறுதிகள் இல்லை. எங்களால் முடிந்த அளவிற்கு செய்கிறோம்.
கிராம சபை கூட்டம் தூசி தட்டி மீண்டும் நடக்க நாங்களும் காரணம்.
அம்மன்குளம் பகுதியிலும் ஆய்வு செய்து மக்களின் தேவையை செய்வோம்.
இது அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு. சமூகத்திற்கான உறவு.
குடிநீர் வசதி ஏற்படும் செய்து தருவோம். நாங்கள் கட்டி தரும் கழிப்பறை நம்முடைய கழிப்பறை.
அதை ஆரோக்கியமான இடமாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதை நான் பார்க்க வருவேன். அப்போது அது தூய்மையாக இல்லை என்றால் வெளக்கமாரை எடுத்து நானே சுத்தம் செய்வேன்.
நான்கு கழிப்பறைகள் கட்டிதருகிறோம். எம்.எல்.ஏ தேர்தலில் உங்களை வெற்றி பெற வைத்தோம் என மக்கள் சொல்கிறார்கள். ஆனால் யார் தோற்க அடித்தார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
தேர்தலுக்கு அப்பாற்பட்டு வேலை செய்துகொண்டே இருப்போம்” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.