/tamil-ie/media/media_files/uploads/2018/02/jeyakumar..jpg)
chennai lockdown, minister jeyakumar
கமல்ஹாசன் - ரஜினிகாந்த் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயகுமார் கலாய்த்தார். ‘இவரு சர்ச்சில்... அவரு ரூஸ்வெல்ட்டா?’ என கேள்வி எழுப்பினார் அவர்.
கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி தனது அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார். இதையொட்டி தனது விருப்பத்திற்கு உரிய தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த அடிப்படையில் தனது நண்பரும், விரைவில் அரசியலுக்கு வர இருப்பவருமான ரஜினிகாந்தையும் நேற்று (பிப்ரவரி 18) சந்தித்து பேசினார்.
கமல்ஹாசன் - ரஜினிகாந்த் சந்திப்பு மீடியாவில் பிரதான இடத்தைப் பிடித்தது. கமல்ஹாசன் சந்திப்பு குறித்து பேட்டியளித்த ரஜினிகாந்த், தனது வாழ்த்துகளை நெகிழ்வுடன் குறிப்பிட்டார். கமல்ஹாசனும், அரசியலை விட நட்பு அதில் அதிகம் இருந்ததாக சொன்னார்.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் சந்திப்பு குறித்து இன்று அமைச்சர் ஜெயகுமாரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘மீடியாக்கள்தான் இதையே போட்டு முக்கியத்துவம் கொடுக்குறீங்க! என்னமோ உலகத் தலைவர்கள் சர்ச்சிலும் ரூஸ்வெல்ட்டும் சந்தித்த மாதிரி! அவங்க ரெண்டு பேரும் சந்தித்ததால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை? ஒன்றுமே இல்லை’ என கலாய்த்தார் ஜெயகுமார்.
வின்ஸ்டன் சர்ச்சில், இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர்! தியோடர் ரூஸ்வெல்ட், அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.