Advertisment

அரசியலுக்கு வருவதற்கு முன் பினராயி விஜயனிடம் ஆலோசனை கேட்டேன்; கேரளாவில் மனம் திறந்த கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது மக்களை மையப்படுத்திய அரசியல், புகழ்பெற்ற கேரள வளர்ச்சியில் இருந்து உத்வேகம் பெற்றது என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kamal Haasan in Kerala

அரசியலுக்கு வருவதற்கு முன் பினராயி விஜயனிடம் ஆலோசனை கேட்டேன் - கமல்ஹாசன் பேச்சு 

உலக நாயகன் கமல்ஹாசன் தனது மக்களை மையப்படுத்திய அரசியல், புகழ்பெற்ற கேரள வளர்ச்சியில் இருந்து உத்வேகம் பெற்றது என்று கூறியுள்ளார்.

Advertisment

தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனை பெற்றதாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் புதன்கிழமை தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: Took advice from Kerala CM Pinarayi Vijayan before joining politics: Kamal Haasan

கேரளாவின் முன்னேற்றம், சாதனைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் இடதுசாரி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கொண்டாட்டமான 'கேரளியம்' தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் புதன்கிழமை கேரளாவுக்கு வந்திருந்தார். அவர் தனது நடிப்பு வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்ததைப் போலவே, அரசியலில் நுழைவதற்கு முன்பு கற்றுக் கொள்ளவும் உத்வேகம் பெறவும் கேரளாவுக்கு வந்ததாக அவர் கூறினார்.

கேரளியம் தொடக்க விழாவில் பேசிய கமல்ஹாசன், “2017-ல், தீவிர அரசியலில் இறங்க முடிவு செய்தபோது, மீண்டும் கேரளாவுக்கு வந்து எங்கள் அன்பான முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனை பெற்றேன். எனது மக்களை மையப்படுத்திய அரசியல், புகழ்பெற்ற கேரள மாதிரி வளர்ச்சியிலிருந்து உத்வேகம் பெற்றது, தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று நான் கூறியபோது, 1996 ஆம் ஆண்டு மக்கள் திட்டப் பிரச்சாரத்தின் மூலம் கேரளாவின் மையப்படுத்தப்பட்ட ஆளுகையின் அற்புதங்களை நான் பின்பற்ற விரும்புகிறேன்” என்று கமல் ஹாசன் கூறினார்.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், சி.பி.ஐ (எம்) மூத்த தலைவர்கள், நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், ஷோபனா உள்ளிட்ட நடிகர்கள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், தனது வாழ்வில் கேரளாவுக்கு தனி இடம் உண்டு என்றும், இந்த மாநில மக்கள் எப்பொழுதும் அவரது கலையை தாராளமாக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.

மேலும், உண்மையான ஜனநாயக ஆட்சியை அடைய பெரும்பாலான மாநிலங்கள் போராடி வருகின்றன, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பரவலாக்கம், கேரளா உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது, நாட்டின் பிற பகுதிகளும் அதை பின்பற்றும் என்று அவர் நம்புவதாகக் கூறினார்.

தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய இரு மாநிலங்களும் புவியியல் எல்லைகளை மட்டுமின்றி கலாசார பந்தத்தையும் பகிர்ந்து கொள்கின்றன என்றார்.  “இரு மாநிலங்களும் அறிவு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளன, சுகாதாரம், கல்வி முறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. நமது மக்கள் பாரம்பரிய கலைகள், இசை, நடனம் ஆகியவற்றில் ஆழ்ந்த அன்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நம்முடைய மொழி மற்றும் சமையல் ஒற்றுமைகள், குறிப்பாக, சிறு குழந்தையாக நான் கேரளாவில் வேலைக்கு வந்தபோது எனக்கு உதவியது” என்று கமல்ஹாசன் கூறினார்.

1924 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள வைக்கம்-மில்தான் ஈ.வே. ராமசாமி என்ற சாமானியர் திராவிட இயக்கச் சின்னமான பெரியாராக மாறினார் என்றும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சத்தியாகிரகப் போராட்டத்தின் போது அவர் ‘வைக்கம் வீரர்’ என்ற பெயரைப் பெற்றார் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

கேரளாவின் திரைப்படத் துறையைப் பாராட்டிய கமல்ஹாசன், “இந்த மாநிலத்தின் கலாச்சார நிலப்பரப்பையும், சினிமா குறித்த எனது பார்வையையும் வடிவமைப்பதில் கேரளாவின் திரைப்படத் துறை முக்கியப் பங்காற்றியுள்ளது. நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்வதோடு மட்டுமல்லாமல், பொருத்தமான சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. சமூக விவரிப்புகளுக்கான இந்த அர்ப்பணிப்பு மாநிலத்தின் முற்போக்கான மற்றும் சமூக உணர்வு நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது. எனது கலை வாழ்க்கையில் இதைப் பின்பற்றுவதில் பெருமைப்படுகிறேன்.” என்று கூறினார்.

கேரள அரசு குறிப்பிட்டுள்ளபடி, கருத்தரங்குகள், கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள், உணவு திருவிழா, மற்றும் திரைப்பட விழா, மலர் கண்காட்சிகள், கலாச்சார விழாக்கள் போன்றவை, திருவனந்தபுரத்தில் உள்ள 40 இடங்களில் ஒரு வார கால கேரளா நிகழ்வில் நடைபெற உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment