Advertisment

நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை: கோவை வந்த கமல்

விமானம் மூலம் கோவை வந்தடைந்த கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

author-image
WebDesk
Sep 22, 2023 13:29 IST
New Update
Kamal Haasan visit Coimbatore for Makkal Needhi Maiam party

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

kamalhaasan | makkal-needhi-maiam | coimbatore: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று கோவை வந்தடைந்தார். விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்நிலையில், கமல்ஹாசன் நட்சத்திர ஹோட்டலில் மக்கள் நீதி மய்ய கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். முன்னதாக, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் இருந்து கட்சியினர்களுக்கு கையசைத்தவாறு புறப்பட்டு சென்றார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Makkal Needhi Maiam #Coimbatore #Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment