Advertisment

மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை, மருந்து போட்டுவிட்டு மீண்டும் கோவையில் போட்டியிடுவேன்:கமல்

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
கமலஹாசன்

கமலஹாசன்

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

 அப்போது நிர்வாகிகளிடையே பேசிய அவர் சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக ஒரு சின்னப்பிள்ளையை அடியோ அடி என அடிக்கிறார்கள் எனவும் அது அவரது தாத்தாவிற்கு தாத்தா சொன்ன விஷயம் என்றார். மேலும் எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர் பெரியார் எனவும் சாமி இல்லை என சொல்வது பெரியாரின் வேலை அல்ல, சமுதாயத்திற்காக கடைசி வரை வாழ்ந்தவர் பெரியார் என்றார். திமுகவோ, வேறு எந்த கட்சியும் பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது, பெரியாரை தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும் என்றார்.

நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிய அரசு சீக்கிரம் கொண்டு வருவார்கள் என கூறிய அவர் கடந்த தேர்தலில் ஜெயித்திருந்தால் எம்எல்ஏ இல்லையென்றால் போதும் நெஞ்சை நிமிர்த்தி நடந்தேன் எனவும் என் முகத்தில் அப்போது சோகம் இல்லை, அத்தனை மக்கள் வாக்களித்தும் நம்மை ஏமாற்றியது யார்? மீண்டும் நாம் சூழ்ச்சிக்கு ஆளாக கூடாது என்று நினைத்தாக கூறினார் . மநீமவை பொருத்தவரை எனக்கு வெவ்வேறு இடங்களில் இருந்து அழைப்பு வருகிறது, தேர்தலில் நிற்க கோவைக்கு வாருங்கள். நாம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என தொண்டர்கள் சொல்கிறார்கள், அதே சமயம் சென்னைக்கு வாருங்கள் என அழைக்கிறார்கள். இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்கு நான் மன்னிப்பு தான் கேட்க வேண்டும் என்றார். கலைஞர் என்னை திமுகவிற்கு வருமாறு அழைத்தார் அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போகிறேன் என சொல்லியிருக்க வேண்டும் அப்பா காங்கிரசில் இருப்பதால் காங்கிரசில் சேர்கிறேன் என சொல்லியிருக்க வேண்டும். அப்போதே அரசியலில் இறங்கி இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

 கோவையில் 6 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன, மொத்தமாக அனைத்து பூத்திலும் வேலை செய்ய 40 ஆயிரம் பேர் வேண்டும் என கூறுய அவர், கோவைக்கு வாங்க என கூப்பிடுவது மட்டும் போதாது எனவும்  வேலை செய்ய 40 ஆயிரம் பேரை தயார் செய்ய வேண்டும் என்றார். மேலும் விக்ரமுக்கு கூட்டம் சேர்ந்தது. மநீமவிற்கு கூட்டம் சேரவில்லை என்று சொல்வதை நம்ப முடியுமா? உங்களால் இயன்றதை செய்யுங்கள் என்று தான் கூறுகிறேன் என்றார். எனக்கு மூக்கு உடைத்தாலும் பரவாயில்லை, மருந்து போட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன் என்றார்.

 தேர்தலில் 40 இடங்களிலும் நீங்கள் வேலை செய்ய தயாராக வேண்டும் எனவும் கூறினார். நல்ல தலைமை தமிழ்நாடு முழுவதற்கும் வர வேண்டும், நமது அஜாக்கிரதையினால் நாம் பழியாகி விடக் கூடாது என்றார். ஒருவர் தேரை இழுக்க முடியாது, அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டும் என தெரிவித்தார்.  மேலும் முதியவர்கள் புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றார்.

 கட்சிக்கு புதிதாக வருபவர்களுக்கு நீங்கள் வேலியாக இருக்க கூடாது. ஏணியாக இருக்க வேண்டும் என்றார். கட்சியில் பதவி நிரந்தரம் இல்லை எனவும் உறவு தான் நிரந்தரம் எனவும் கூறினார். வேலை செய்தால் தான் பதவி நிரந்தரம் என்றார்.

ஒருவரே பிரதமராக இருக்க வேண்டும் என நினைப்பது சர்வதிகாரம் என குறிப்பிட்ட அவர் அதற்கு எதிராக இந்தியா வெகுண்டு பேசுகிறதுஎன்றார்.  இந்தி ஒழிக என சொல்லவில்லை. தமிழ் வாழ்க என்று சொல்கிறோம் எனவும் இந்தி பேசினால் தான் வேலை என்றால், அந்த வேலை வேண்டாம் என்றார்.

 8 கோடி பேர் தமிழ்நாட்டை காப்பாற்ற வேலை செய்தாலே, முதன்மை மாநிலமாகி விடும் எனவும் கூறினார். அரசியல் என்றால் சூது வாது இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள கூடாது, வெறி பிடிக்காமல் இருக்க அன்பு ஒன்று மருந்து என கூறிய அவர் அன்பு ஒன்று தான் எனக்கு தெரிந்த மதம், அதைவிட பெரிய மதம் மனிதம் என்றார்.

 செய்தி: பி.ரஹ்மான், கோவை 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment