பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பணமதிப்பிழப்பு பாணியில் 4 மணி நேர அவகாசத்தில் உத்தவிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களான அடித்தட்டு மக்களின் நலைனை பிரதமர் மோடி கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கமல்ஹாசன் அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது: “நான் இந்த கடிதத்தை பொறுப்புடனும் நம் நாட்டின் பாதிக்கப்பட்ட குடிமகனாகவும் எழுதுகிறேன். உங்களுக்கு மார்ச் 23-ம் தேதி எழுதிய என்னுடைய முதல் கடிதத்தில், நம்முடைய சமூதாயத்தின் ஏழை எளிய அடித்தட்டு மக்களான அறியப்படாத நாயகர்களைப் பற்றிய பார்வையை அரசு இழந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினேன். அடுத்த நாளே இந்த நாட்டில் கண்டிப்பான உடனடி ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பு கிட்டத்தட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பு ஸ்டைலில் இருந்தது. அதனால், நான் அதிர்ச்சி அடைந்தேன். எனது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை நம்புகிறேன். நாம் ஒன்றை நம்ப விரும்புகிறோம். நீங்கள் பணமதிப்பிழப்பை அறிவித்தபோது நான் உங்களை நம்பினேன். ஆனால், எனது நம்பிக்கையை தவறு என்று நிரூபித்தது. நீங்களும் தவறு என்று காலம் நிரூபித்தது சார்.
முதலில் நீங்கள் இன்னும் இந்த தேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக உள்ளீர்கள் என்பதையும் இந்த நெருக்கடியின் போது உங்களுடைய ஒவ்வொரு உத்தரவையும் உண்மையாகவே நான், நீங்கள் உட்பட 1.4 பில்லியன் இந்தியர்கள் பின்பற்றுவார்கள் என்பதையும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இன்று, இதுபோல, வெகுஜன மக்கள் பின்தொடரும் வேறு எந்த உலகத் தலைவரும் இல்லை. நீங்கள் பேசுவதை அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்று நாடு இந்த நேரத்தில் உங்கள் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை வைத்துள்ளது.
எண்ணற்ற சுகாதாரப் பணியாளர்கள் மக்களுக்காக தன்னலமின்றி, அயராது உழைப்பதைப் பாராட்டும் பொருட்டு நீங்கள் கைத்தட்டி பாராட்ட அழைப்பு விடுத்தபோது உங்களை விமர்சிப்பவர்கள்கூட கைதட்டி ஆரவாரம் செய்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
உங்கள் விருப்பங்களுக்கும் உத்தரவுகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்போம். ஆனால், எங்கள் ஒத்துழைப்பை எங்கள் அடிபணிதலாக குழப்பிக்கொள்ளப்படக் கூடாது.
எனது மக்களின் தலைவராக எனது பங்கை மனதிலிருந்து பேசவும் உங்கள் வழிகளைக் கேள்வி கேட்கவும் எனக்கு உதவுகிறது. தயவுசெய்து எனது கேள்விகள் முறையற்றது என்றால் மன்னிக்கவும்.
எனது மிகப் பெரிய பயம் என்னவென்றால், பணமதிப்பிழப்பு அறிவிப்பின்போது செய்த அதே தவறு மிகப் பெரிய அளவில் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. பணமதிப்பிழப்பு ஏழைகளின் சேமிப்பு மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க வழிவகுத்தது என்றாலும், இந்த மோசமான திட்டமிடப்படாத ஊரடங்கு நம்மை உயிரையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் அபாயகரமான கவலையை நோக்கி இட்டுச் செல்கிறது.
ஏழைகளுக்கு உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஒருபுறம் நீங்கள் முன்னேறிய மக்களிடம் விளக்கு வைக்கச் சொல்கிறீர்கள். மறுபுறம் ஏழை மனிதனின் அவலநிலை ஒரு வெட்கக்கேடான காட்சியாக மாறி வருகிறது.
உங்கள் உலகத்தினர் பால்கனிகளில் எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றும்போது ஏழைகள் தங்கள் அடுத்த வேளை ரொட்டி சுடுவதற்கு எண்ணெய்க்காக போராடுகிறார்கள். உங்களுடைய கடைசி 2 உரைகளிலும் நாட்டு மக்களை அமைதிப்படுத்த முயற்சித்தீர்கள். ஆனால், அதைவிட அவசரமாக முக்கியமான ஒன்று உள்ளது. இந்த உளவியல் ரீதியான பேச்சு பால்கனி உலகத்தினரின் பிரச்னையை தீர்த்து உற்சாகப் முடியும். ஆனால், வீடில்லாத ஏழை மக்களுக்கு என்ன இருக்கிறது?
நம்முடைய சமுதாயத்தின் மிகப்பெரிய அங்கமாக இருக்கும் ஏழைகளை, நம்முடைய ஆதரவு அமைப்பு மற்றும் நடுத்தர வர்க்கம் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அடித்தள மக்களை முற்றிலுமாக புறக்கணிப்பதன் மூலம் நீங்கள் பால்கனி மக்களுக்கு மட்டுமே பால்கனி அரசாங்கமாக இருக்க விரும்பவில்லை என்று நான் நம்புகிறேன்.
பணக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புகிறார்கள். ஏழை மனிதன் ஒருபோதும் முதல் பக்க செய்திகளில்கூட இடம் பெறுவதில்லை. ஆனால், தேசத்தின் வலிமை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஏழைகள் செய்த பங்களிப்பை புறக்கணிக்க முடியாது.
ஏழை மனிதனுக்கு தேசத்தில் பெரும்பான்மை பங்கு உள்ளது. அடிமட்டத்தை அழிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் மேல்புறத்தை கவிழ்க்க வழிவகுக்கும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. இதை அறிவியல் ரீதியாகவும்கூட ஒப்புக்கொள்கிறார்கள்.
இது முதல் நெருக்கடி, சமூகத்தின் உயர்மட்டத்தினர் அடிமட்டத்தில் ஏற்படுத்திய முதல் தொற்றுநோய். எல்லாவற்றிற்கும் மேலாக, அதாவது ஐயா அனைவரையும் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்கள், ஆனால், கீழே உள்ளவர்கள். மில்லியன் கணக்கான தினசரி கூலித் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தெருவில் தள்ளுவண்டி விற்பனையாளர்கள், ஆட்டோ ரிக்ஷா, டாக்ஸி ஓட்டுநர்கள், ஆதரவற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருட்டில் ஒளியைக் காண போராடுகின்றனர். ஆனால், நாம், ஏற்கனவே நன்கு கட்டமைக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தை மட்டுமே பாதுகாப்பதாகத் தெரிகிறது.
ஐயா என்னை தவறாக நினைக்காதீர்கள். நாம் நடுத்தர வர்க்கத்தையோ அல்லது ஒரு பிரிவையோ புறக்கணிக்க கூறவில்லை. உண்மையில், நான் சரியாக அதற்கு மாறாக ஒன்றை பரிந்துரைக்கிறேன். எல்லோருடைய கோட்டையையும் பாதுகாப்பதற்கும், யாரும் பசியுடன் படுக்கச் செல்லவில்லை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதைக் காண விரும்புகிறேன்.
கோவிட் -19 தொடர்ந்து பலிகளைக் காணும். ஆனால், ஏழைகளின் பசி (எச்), சோர்வு (இ) மற்றும் பற்றாக்குறை (டி) ஆகியவற்றிற்கான களத்தை நாம் உருவாக்குகிறோம். HED '20 என்பது ஒரு நோய். இது அதன் தன்மையில் சிறியதுதான். ஆனால், கோவிட் -19 உடன் ஒப்பிடும்போது மிகவும் ஆபத்தானது. கோவிட் -19 மறைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு அதன் தாக்கம் உணரப்படும்.
ஒவ்வொரு முறையும் நமக்கு ஒரு சரிவை நிறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற ஒரு உணர்வு இருக்கிறது. உற்சாகமான தேர்தல் பாணி பிரச்சார யோசனையை கட்டவிழ்த்துவிடுவதற்கு நீங்கள் உங்களுக்கு வசதியான பகுதிக்குள் நுழைவதாகத் தெரிகிறது. நீங்கள் சாதாரண மக்களுக்கு பொறுப்பான நடத்தையையும் மாநில அரசாங்கங்களுக்கு வெளிப்படைத்தன்மை நிர்வாகத்தையும் அளிப்பதாகக் காட்டுகிறது. இந்தியாவுக்காக இன்றும் நாளையும் ஒரு பெரிய நோக்கத்திற்காக உழைத்து அறிவுஜீவிமயமாக்குவதற்கு போதுமான நேரத்தை செலவிடுவோர் மத்தியில் நீங்கள் உருவாக்கும் கருத்து இதுதான்.
அறிவுஜீவி என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்துவதன் மூலம் நான் உங்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். ஏனென்றால், உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும் அந்த வார்த்தை பிடிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், நான் பெரியார் மற்றும் காந்தியைப் பின்பற்றுபவன், அவர்கள் முதலில் அறிவுஜீவிகள் என்று எனக்குத் தெரியும். அனைவருக்கும் நீதி, சமத்துவம் மற்றும் வளம் ஆகியவற்றின் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒருவரை வழிநடத்தும் அறிவு அவர்கள்.
சூடான மற்றும் தெளிவில்லாத பிரச்சாரத்தின் மூலம் மக்களின் சக்தியை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் கவனம் செலுத்துவது உங்கள் நிறுவனத்தின் உயிரைக் காப்பாற்றக்கூடிய சில செயல்களைப் புறக்கணிக்க வழிவகுக்கும். தொற்று நோய் பரவலைத் தடுக்க சட்டம் ஒழுங்கு அமலுக்கு வந்தபோது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அறிவற்ற மற்றும் முட்டாள்தனமானவர்களின் கூட்டங்களை நிறுத்த உங்கள் அமைப்பு தவறிவிட்டது. இந்தியாவில் தொற்றுநோய் பரவுவதற்கான மிகப்பெரிய மையங்களாக இவை மாறிவிட்டன. இந்த அலட்சியம் காரணமாக இழந்த அனைத்து உயிர்களுக்கும் யார் பொறுப்பு?
இந்தியாவில் ஜனவரி 30-ம் தேதி முதல் கொரோனா தொற்று நோய் கண்ட்றியப்பட்டது. நாம் இத்தாலிக்கு என்ன நடந்தது என்பதைப் பார்த்துள்ளோம். இருப்பினும், நாம் ஆரம்பத்தில் போதுமான அளவு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. நாம் இறுதியாக விழித்தெழுந்தபோது, 10.4 பில்லியன் மக்கள்கொண்ட நாட்டை 4 மணி நேரத்துக்குள் முடக்க ஊரடங்கு உத்தரவிட்டீர்கள். இது பற்றி 4 மாதங்களுக்கு முன்பே நீங்கள் அறிந்திருந்தபோதும் மக்களுக்கு 4 மணி நேரம் மட்டுமே அவகாசம் அளித்தீர்கள். தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் பிரச்னைகள் பெரியதாக மாறுவதற்கு முன்பே தீர்வுகளைக் காண வேண்டும்.
இதை சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். இந்த முறை உங்களுடைய தொலைநோக்குப் பார்வை தோல்வியடைந்துவிட்டது.” என்று எழுதியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.