கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளை வெளியே சொன்னால் அதை காப்பி அடித்துவிடுவார்கள் என்று கூறிய நிலையில், மநீம-வின் கொள்கை காப்பியடிக்கப்பட்டதுதான் என்று விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தென் தமிழகத்தில் தொடர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கமல்ஹாசன் சிவகாசியில் பட்டாசு ஆலை தொழிலாளர்களையும் சந்தித்து செவ்வாய்க்கிழமை உரையாடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “தான் எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன். அதனால் தனக்கு எம்ஜிஆரை கொண்டாடுவதற்கு உரிமை உள்ளது என்றார். தமது கட்சியின் கொள்கைகள் என்ன என்பது வெளியே தெரிந்தால் மற்றவர்கள் காப்பி அடித்துவிடுவார்கள். அதனால், அதனை நாங்கள் சொல்லமாட்டோம்” என்று கூறினார்.
கமல்ஹாசன் தனது கட்சியின் கொள்கைகளை வெளியே சொன்னால் மற்றவர்கள் காப்பியடித்துவிடுவார்கள் என்று கூறியது தமிழக அரசியலில் சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், விசிக பொதுச்செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பி-யுமான ரவிக்குமார் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொள்கை அமெரிக்காவின் செண்ட்ரிஸ் கட்சிக் கொள்கைகளின் காப்பி என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் ‘காப்பி ரைட்’
கட்சி கொள்கையை வெளியே சொன்னால் காப்பி அடித்துவிடுவார்கள் என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஆனால்…
Posted by Ravi Kumar on Tuesday, 15 December 2020
இது குறித்து விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் கமல்ஹாசனின் காப்பி ரைட் என்று தலைப்பிட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “கமல்ஹாசனின் ‘காப்பி ரைட்’
கட்சி கொள்கையை வெளியே சொன்னால் காப்பி அடித்துவிடுவார்கள் என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் இணைய தளத்தில் மய்யவாதம் ( centrism) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பவை அமெரிக்காவில் செயல்படும் அரசியல் கட்சியான The Centrist Party இன் கொள்கைகள் எனக் குறிபிடப்பட்டிருப்பவற்றின் அப்பட்டமான காப்பி.
The Centrist Party இன் இணைய தளத்திலிருந்து வரிக்கு வரி கட் அண்ட் பேஸ்ட் செய்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். Salient points about centrism from the CP perspective என்ற தலைப்பின்கீழ் தரப்பட்டிருக்கும் 3 பாய்ண்ட்டுகளையும் அப்படியே காப்பி எடுத்து centrism என்ற தலைப்பின்கீழ் தனது இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது கமல் கட்சி.
இப்படி காப்பி அடிப்பதற்கு தனக்கு மட்டுமே ‘ரைட்’ இருக்கிறது. அதுதான் ‘காப்பிரைட்’ என கமல் நினைத்துக்கொண்டிருக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல்ஹாசன் தனது கட்சி கொள்கைகளை வெளியே சொன்னால் காப்பி அடித்துவிடுவார்கள் என்று கூறிய நிலையில், அவரது கட்சி கொள்கைகள் அமெரிக்காவின் செண்ட்ரிஸ்ட் கட்சியின் கொள்கைகளைத் தழுவி அப்படியே காப்பியடிக்கப்பட்டது என்று விசிக எம்.பி. ரவிக்குமார் விமர்சித்துள்ளது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Kamal haasans makkal needhi maiam policies copy of centrist party vck mp ravikumar slams
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்