scorecardresearch

மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த விருப்பம்: கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு

“கட்சி கடந்து ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்கிறேன்” – கமல்ஹாசன்

மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த விருப்பம்: கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு

டெல்லியில் நடந்த ‘பாரத் ஜொடோ’ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் கலந்துகொண்ட கமல்ஹாசன், தன்னுடன் பயணித்த மக்கள் நீதி மையம் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சென்னையில் மக்கள் நீதி மையம் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறியதாவது, “நிர்வாகிகளை சந்தித்து பேசியதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அவர்கள் எல்லாரும் ஒரு குரல் கேட்டதும் திரண்டு ‘பாரத் ஜொடோ’ யாத்திரைக்காக டெல்லிக்கு வந்தார்கள்.

இழந்த பாரதத்தின் மாண்புகளை மீட்டெடுக்க வேண்டிய முயற்சிகளில் இது முதல் படி ஆகும். கட்சிக்கு அப்பாற்பட்ட யாத்திரை இது என்பதால், ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்கிறேன்.

அதன்பின்பு என் மனதில் உள்ள அதுத்தகட்ட ஏற்பாடுகளை தெரிவித்தோம். அது என்னவென்றால், சென்னையில் ஜல்லிக்கட்டை கொண்டு வந்து நடத்தவேண்டும் என்பது எங்களுடைய ஆசை. அதற்கான அனுமதிகள் பெறுவதற்காக ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

சென்னையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தை நான் மறக்கவில்லை. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த இயலாது, வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்நகரத்தில் வசிப்பவர்களுக்கு ஜல்லிக்கட்டில் அருமையும் பெருமையும் புரியவைக்க வேண்டும்” என்று கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kamal hassan meet makkal needhi maiyam party members expects jallikattu in chennai

Best of Express