/indian-express-tamil/media/media_files/2025/07/26/thiruvallur-child-abuse-2025-07-26-07-07-29.jpg)
Today Latest Live News Update in Tamil 25 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Jul 25, 2025 21:48 ISTபிரதமர் தமிழகம் வருகை - ஹெலிபேட் இடமாற்றம்தமிழகம் வரும் பிரதமர் மோடி ரூ.1,030 கோடியில் நிறைவடைந்த ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி கங்கை கொண்ட சோழபுரம் அருகே குருவாலப்பர் கோவிலில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குருவாலப்பர் கோவில் இடத்திற்கு பதிலாக பொன்னேரியில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அமைக்கப்பட்ட ஹெலிபேட் அருகே உயர் மின்னழுத்த கோபுரங்கள் உள்ளதால் விமானியின் அறிவுரையின்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
- Jul 25, 2025 21:07 IST”சிறப்பு தீவிர திருத்தம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது"சிறப்பு தீவிர திருத்தம் (#SIR) தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பின்தங்கிய மற்றும் கருத்து வேறுபாடு கொண்ட சமூகங்களின் வாக்காளர்களை அமைதியாக அழிக்கவும், பாஜகவுக்கு ஆதரவாக சமநிலையை சாய்க்கவும் பயன்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது சீர்திருத்தம் பற்றியது அல்ல. இது விளைவுகளைப் பற்றியது. பீகாரில் நடந்தது அனைத்தையும் கூறுகிறது: ஒரு காலத்தில் தனக்கு வாக்களித்த அதே வாக்காளர்கள் இப்போது அதை வாக்களிப்பார்கள் என்று டெல்லி ஆட்சிக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் வாக்களிப்பதை முற்றிலுமாகத் தடுக்க முயற்சிக்கிறது என்றார். 
- Jul 25, 2025 20:36 ISTஹைட்ரஜனில் இயங்கும் ரயில் ஐ.சி.எப்.,யில் சோதனை வெற்றிசென்னை, ஐ.சி.எப்.,யில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. கார்பன் வெளியேற்றத்தை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக ஹைட்ரஜன் ரயில்கள் இருக்கும், ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றும் என மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். 
- Jul 25, 2025 20:33 ISTபீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தேர்தல் ஆணையம்பீகாரில் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இறப்பு, இடம் பெயர்ந்தவர்கள், மற்றும் இரு இடங்களில் பதிவு என மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1-ந்தேதி வெளியிடப்படும் என்றும், அதில் தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், 65 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும், இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வாக்காளர்கள் நீக்கமாக பார்க்கப்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 
- Jul 25, 2025 20:09 ISTஅந்தமானில் நிலநடுக்கம் - ரிக்டரில் 4.9 ஆக பதிவுஅந்தமான் கடல் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மாலை 6.27 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 9.36 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.31 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. 
- Jul 25, 2025 19:44 ISTராகுல்காந்தி நாளை குஜராத் பயணம்எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நாளை குஜராத் மாநிலத்திற்கு செல்கிறார். வதோரா மாவட்டத்தில் காலை 10 மணிக்கு நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். பிறகு குஜராத் மாநில புதிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் ராகுல்காந்தி சுமார் 4 மணி நேரம் இருந்து காங்கிரஸ் தொண்டர்களுடன் கலந்துரையாடுகிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
- Jul 25, 2025 19:17 ISTஇந்தியா-மாலத்தீவு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துபிரதமர் மோடி , மாலத்தீவு அதிபர் முகமது முய்க முன்னிலையில் இந்தியா-மாலத்தீவுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா நிதியுதவியுடன் மாலத்தீவு ஹுல்ஹுமாலேயில் 3,300 வீடுகள், அட்டு நகரில் சாலைகள் மற்றும் வடிகால் திட்டம் தொடக்கம். இந்தியா-மாலத்தீவு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தொடங்க இருநாடுகளும் சம்மதம். இந்திய அரசு மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 72 கனரக வாகனங்களை வழங்குகிறது. 
- Jul 25, 2025 19:03 IST65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - ஸ்டாலின் கண்டனம்பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எங்களை தோற்கடிக்க முடியாவிட்டால், நீங்கள் எங்களை நீக்க முயற்சிக்கிறீர்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள். நமது ஜனநாயகத்திற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் உறுதியான எதிர்ப்பை எதிர்கொள்ளும். தமிழ்நாடு முழு பலத்துடன் குரல் எழுப்பும். இந்த அநீதியை நம்மிடம் உள்ள அனைத்து ஜனநாயக ஆயுதங்களை பயன்படுத்தி எதிர்த்துப் போராடுவோம் என்று தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். 
- Jul 25, 2025 19:00 IST”தி.மு.க. ஆட்சியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்வு”புதுக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ நடைபெற்று வருகிறது. மக்களவை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொடு வருகிறார். அங்கு பேசிய அவர், திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்ந்து வருகிறது. என் வீட்டிற்கு ரூ.4,000 என்று வந்த மின்கட்டணம் தற்போது ரூ.12,000 வரை வருகிறது என்றார். 
- Jul 25, 2025 18:31 ISTதிருவள்ளூர் பாலியல் வன்கொடுமை சம்பவம் - இளைஞர் கைதுதிருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா - சூலூர்பேட்டையில் வடமாநில இளைஞர் சிக்கியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வடமாநில இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது 
- Jul 25, 2025 18:12 ISTடெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் புதிய சாதனைஇங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்கள் எடுத்து முதலிடம், ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 13,378 ரன்கள் எடுத்து 2-வது இடம் பெற்றுள்ளனர். 13,289 ரன்கள் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர் ஜாக் காலிசை முந்தி 3-வது இடத்திற்கு ஜோ ரூட் (13,290* ரன்கள்) முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இந்தச் சாதனை படைத்தார் 
- Jul 25, 2025 18:02 ISTகமல்ஹாசனுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் வாழ்த்துமாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துத் தெரிவித்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அறிவித்துள்ளார். 
- Jul 25, 2025 17:55 ISTமாலத்தீவில் பிரதமர் மோடிக்கு வரவேற்புமாலத்தீவு தலைநகர் மாலேவில் குடியரசு சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 
- Jul 25, 2025 17:11 ISTஜாமீன் கோரி மூன்றாவது முறையாக தேவநாதன் யாதவ் மனுதேவநாதன் யாதவ் இயக்குனராக இருந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் உறுதியளித்துள்ளது. சென்னை மயிலாப்பூர் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக மனு அளித்தனர். 
- Jul 25, 2025 16:30 IST20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள்திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். 
- Jul 25, 2025 15:48 ISTசெந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவுதமிழ்நாட்டில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரூ. 397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் பேரில், லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 
- Jul 25, 2025 15:31 ISTவனத்துறை அதிகாரி வீட்டில் இருந்து பணம் பறிமுதல்ஒடிசாவில் வனத்துறை அதிகாரியான ராமச்சந்திர நெபாக் என்பவருக்கு சொந்தமான 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ரூ. 1.44 கோடி மதிப்பிலான பணம், தங்க பிஸ்கெட்டுகள், நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 
- Jul 25, 2025 14:56 ISTஐ.டி ஊழியருக்கு பாலியல் தொல்லை - ஒருவர் கைதுசென்னை, துரைப்பாக்கம் பகுதியில் நடந்து சென்ற பெண் ஐ.டி ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்ட கட்டட பொறியாளர் சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். 
- Jul 25, 2025 14:48 ISTகமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்திய திருமாவளவன்மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 
- Jul 25, 2025 13:50 ISTஇதழியல் முதுநிலை பட்டயப் படிப்பு!2025-26ம் கல்வி ஆண்டு முதல் இதழியல் முதுநிலை பட்டயப் படிப்பை (Post Graduate Diploma in Journalism) வழங்க உள்ளது சென்னை இதழியல் கல்வி நிறுவனம். இதழியலுடன் டிஜிட்டல் மீடியா பயிற்சியும், காட்சி தொடர்பியல் திறன் உள்ளிட்ட இதழியல் கல்வியையும் தமிழ், ஆங்கிலத்தில் வழங்க திட்டம்! ஆர்வம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் https://cij.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 
- Jul 25, 2025 13:14 IST25 ஆபாச செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடைஉல்லு, ஆல்ட் உள்பட 25 ஆபாச செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆபாச வீடியோக்கள் பதிவேற்றப்பட்ட காரணத்தால் ஏற்கனவே பல ஆபாச இணையதளங்களுக்கு ஒன்றிய அரசு தடைவிதித்துள்ள நிலையில் மேலும் 25 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
- Jul 25, 2025 13:09 ISTபிரதமர் மோடியை சந்திக்கிறார் ஓபிஎஸ்தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதாகத் தகவல். சந்திக்க நேரம் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்த நிலையில், அனுமதி கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
- Jul 25, 2025 13:06 ISTஓரணியில் தமிழ்நாடு – 2 கோடிக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் முன்னெடுப்பில் 2 கோடி பேர் இணைந்தனர். மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திமுகவில் உறுப்பினராக இணைந்தனர். சமூக நீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான திமுகவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் திமுகவில் உறுப்பினராக இணைந்தனர். ஜூலை 1ல் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை முதலமைச்சர் தொடங்கி வைத்ததை அடுத்து உறுப்பினர் சேர்க்கை தீவிரமடைந்துள்ளது. 
- Jul 25, 2025 12:40 ISTஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்துக்கு வரவேற்பு -ஜவாஹிருல்லாஓரணியில் தமிழ்நாடு என்ற திமுகவின் பிரச்சாரம் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திமுக பிரச்சாரத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசை பழனிசாமி விமர்சிக்கிறார். அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு செய்த துரோகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். பாஜக ஆதரவுடன் வலம் வரும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார். 
- Jul 25, 2025 12:34 ISTஅமித்ஷாவை சந்தித்தால் தவறா? - இபிஎஸ்நாங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தால் தவறா? முதல்வரும் அவரது மகனும் யார்வீட்டு கதவை தட்டினர்? திமுக செயல்படுத்தாத அறிவிப்புகள் குறித்து மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 
- Jul 25, 2025 12:25 ISTஆக.9 முதல் வைகோ பிரச்சாரப் பயணம்மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகஸ்ட் 9 முதல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். ஆகஸ்ட் 9ல் தூத்துக்குடியில் பரப்புரையை தொடங்கும் வைகோ ஆகஸ்ட் 19ல் திருவான்மியூரில் நிறைவு செய்கிறார். தமிழ்நாட்டில் 8 இடங்களில் மதிமுக பொதுச் செயலாளர் பிரச்சார பயணம் மேற்கொள்கிறார். 
- Jul 25, 2025 12:10 ISTரிதன்யா தற்கொலை வழக்கு; கணவர், மாமியார், மாமனார் ஜாமின் மனுவில் காவல்துறை பதில் தர ஐகோர்ட் ஆணை!தற்கொலை வழக்கில் கணவர், மாமியார், மாமனார் ஜாமின் மனுவில் காவல்துறை பதில் தர ஐகோர்ட் அணையிட்டுள்ளது. திருப்பூர் அவநாசியில் வரதட்சணைக் கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது. கைதான கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு. மூவரின் ஜாமின் மனுக்களை திருப்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 
- Jul 25, 2025 11:51 ISTதமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்புமநீம தலைவர் கமல்ஹாசன், திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் வில்சன், 
 கவிஞர் சல்மா, சிவலிங்கம், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றுக்கொண்டனர். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- Jul 25, 2025 11:50 ISTகுடியரசு துணை தலைவர் தேர்தல் - அதிகாரிகள் நியமனம்குடியரசு துணை தலைவர் தேர்தல், மாநிலங்களவை பொது இயக்குநர் தேர்தல் 
 நடத்தும் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை இணை செயலாளர், இயக்குநர் ஆகியோர் உதவி தேர்தல் அலுவலராக நியமித்து
 தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது,
- Jul 25, 2025 11:48 ISTவிஜய் படத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் பிரசாரத்தில் விஜய் புகைப்படம் உள்ள 
 ஸ்டிக்கரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தனது புகைப்படத்தை உடனடியாக
 நீக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
- Jul 25, 2025 11:46 ISTமாநிலங்களவை எம்.பி-யாக பதவியேற்றார் கமல்ஹாசன்மாநிலங்களவை எம்.பி-யாக பதவியேற்றார் கமல்ஹாசன் "பெருமையாகவும், கௌரவமாகவும் கருதுகிறேன்" என பதவியேற்பு குறித்து கமல் கருத்து தெரிவித்துள்ளார். 
- Jul 25, 2025 10:51 ISTமருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடுஎம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது 
- Jul 25, 2025 10:50 ISTபூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் - விஜய் உத்தரவுமுறையாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க த.வெ.க தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வீடு வீடாக சென்று பிரசாரத்தைத் துவங்கியுள்ள த.வெ.க நிர்வாகிகள் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று கூறி வருகின்றனர். மேலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு த.வெ.க நிர்வாகிகள் நேரில் செல்ல வேண்டும், 2 வாரங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளின் நடவடிக்கைகளை தொகுத்து கட்சி தலைமைக்கு வழங்க வேண்டும், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை விரைவில் முடித்தே ஆக வேண்டும் என்று த.வெ.க தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 
- Jul 25, 2025 10:46 ISTராஜஸ்தானில் அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து: 4 மாணவர்கள் மரணம்ராஜஸ்தானில் அரசு உயர்நிலைப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் மரணமடைந்தனர். இந்த விபத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடுள்ளனர். 
- Jul 25, 2025 10:44 ISTசிறையில் இருந்து தப்பிய தமிழக கைதி சிக்கினார்ரயிலில் சென்ற பெண்ணைபாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிய வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கேரளா - கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி, சிறையில் இருந்து தப்பி ஓடிய நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர். 
- Jul 25, 2025 10:42 ISTமல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் அறிவிப்புஆகஸ்ட் 2ம் தேதி மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். 32 ஆண்டுகால பொது வாழ்க்கையை கேள்வி குறியாக்கும் வகையில் `துரோகி' என சொல்லி சிறுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டாட்டியுளள அவர்,நாட்டு மக்களிடம் நீதி கேட்டு அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். 
- Jul 25, 2025 10:41 ISTஸ்விக்கி ஊழியர்களைப் போல் வேடமணிந்து நகை கடையில் கொள்ளைஉத்தரப்பிரதேசம் காசியாபாத் பகுதியில் ஸ்விக்கி, ப்ளிங்கிட் ஊழியர்களைப் போல் வேடமணிந்து நகைக்கடைக்குள் நுழைந்து, துப்பாக்கியை காட்டி ஊழியர்களை மிரட்டி நகைகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 
- Jul 25, 2025 10:09 ISTபூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் - விஜய் உத்தரவுமுறையாக பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க த.வெ.க தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று வீடு வீடாக சென்று பிரசாரத்தைத் துவங்கியுள்ள த.வெ.க நிர்வாகிகள்.தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு த.வெ.க நிர்வாகிகள் நேரில் செல்ல வேண்டும். 2 வாரங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளின் நடவடிக்கைகளை தொகுத்து கட்சி தலைமைக்கு வழங்க வேண்டும், பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை விரைவில் முடித்தே ஆக வேண்டும் என த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார். 
- Jul 25, 2025 09:32 ISTசென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் மாடுகளின் எண்ணிக்கைசென்னை அனுமந்தபுரத்தில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய மோகன் என்பவரை தெருவில் நின்றுகொண்டிருந்த மாடு முட்டியதில் படுகாயமடைந்தனர். டியூசன் முடிந்து வீட்டுக்கு திரும்பிய சிறுவனையும் அதே மாடு முட்டியதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. 
- Jul 25, 2025 09:31 ISTதிரைப்படமாகும் ராமதாஸின் வாழ்க்கை வரலாறுபாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு அய்யா என்ற பெயரில் திரைப்படமாகிறது. இயக்குநர் சேரன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு என்ற தலைப்புடன் அய்யா திரைப்படம் உருவாகிறது. 
- Jul 25, 2025 09:06 ISTஇந்திய விமான விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகள்நடப்பாண்டில் கடந்த 21ஆம் தேதி வரை இந்திய விமான விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. ஏர் இந்தியா விமானங்களில் மட்டும் 85 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாக விமான ஒழுங்குமுறை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 
- Jul 25, 2025 09:05 ISTகோவில்பட்டியில் இளைஞரணி பதவிக்காக தவெகவினர் மோதிக்கொண்டதாக புகார்கோவில்பட்டியில் இளைஞரணி பதவிக்காக தவெகவினர் மோதிக்கொண்டதாக புகார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைனரணி அமைப்பாளர் பதவிக்காக மோதிக்கொண்டதில் இரு தரப்பை சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
- Jul 25, 2025 08:47 ISTஇந்தியா - இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதுஇந்திய பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கு இடையே முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் இருதரப்பு வர்த்தகம் ஆண்டுதோறும் 34 பில்லியன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
- Jul 25, 2025 08:45 ISTபுதுக்கோட்டை இரட்டை கொலை - 6 தனிப்படை அமைப்புபுதுக்கோட்டை - ஆவுடையார்கோவிலில் கண்ணன், கார்த்தி சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட காவல்துறை 6 தனிப்படைகளை அமைத்தது. முன்விரோதம் காரணமாக இரண்டு சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
- Jul 25, 2025 08:43 ISTபிரதமர் வெளிநாட்டுப் பயணம்: ரூ.295 கோடி செலவுநடப்பாண்டில் 5 நாடுகளுக்கு பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.67 கோடி. 2021-2024 வரை காலகட்டத்திற்கு ரூ.295 கோடி செலவு என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 
- Jul 25, 2025 08:18 ISTமகளிர் செஸ் உலகக் கோப்பை, சாம்பியன் ஆகிறது இந்தியாமகளிர் செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நாளை இந்திய வீராங்கனைகள் கொனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் மோதல். இறுதிப் போட்டியில் இரு இந்திய வீராங்கனைகள் விளையாடுவதால் இந்தியாவிற்கு சாம்பியன் பட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
- Jul 25, 2025 08:17 ISTபாமக நிறுவனர் ராமதாஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துபாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 
- Jul 25, 2025 08:16 ISTஅஜித்குமார் கொலை வழக்கு- மருத்துவர்களுக்கு சம்மன்அஜீத்குமார் கொலை வழக்கு தொடர்பாக உடற்கூராய்வு செய்த மூன்று மருத்துவர்களுக்கு இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்த நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
- Jul 25, 2025 07:59 ISTஇந்திய தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டுதேர்தல் ஆணையம் தனது கடமையை சரியாக செய்யவில்லி. கர்நாடகத்தில் ஒரு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் மோசடி நடந்ததற்கான 100% ஆதாரங்கள் காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. இதுபோல் நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான புதிய வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த மோசடியை செய்துவிட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகள் யாரும் தப்ப முடியாது. 
- Jul 25, 2025 07:57 ISTஉயர்நிலை பாலம் அமைக்கும் பணி - நேரில் ஆய்வு செய்த அமைச்சர்சைதாப்பேட்டையில் இருந்து தேனாம்பேட்டை வரையிலான உயர்நிலை பாலம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஒட்டுமொத்தமாக 30% அளவுக்கு பணிகள் முடிந்துள்ள நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். 
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us