தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய எம்.பி.க்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 19, 2025 அன்று நடைபெறுகிறது. இந்தச் சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்குக் கட்சி வேட்பாளர்களும், ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
திமுக வேட்பாளர்கள்:
1. திரு. பி. வில்சன், பி.எஸ்சி., பி.எல்.: வழக்கறிஞரான இவருக்கு மீண்டும் மாநிலங்களவைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2. திரு. எஸ்.ஆர். சிவலிங்கம்
3. ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா
மக்களவைத் தேர்தலின்போது ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் என்று திமுக அறிவித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/05/28/oYWzKltUS1QdN6CU0vgw.webp)