kamala harris father kamala harris family : ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலிபோர்னியாவின் செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் பதவி போட்டியாளராக தேர்ந்தெடுத்துள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக ஆகக்கூடிய வாய்ப்பையும் இதன் மூலம் அவர் பெற்று இருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும்நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
55 வயதான கமலா ஹாரிஸ் 1964ல் பிறந்தவர், கமலாவின் தாயார் ஷியாமலா கோபாலன் 1934ல் சென்னையில் பிறந்தவர், அவரின் தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். அவரது பெயர் டொனால்ட் ஹாரிஸ். கமலாவின் தாய்வழி தாத்தா பி.வி.கோபாலன் பிறந்த ஊர் மன்னார்குடி அருகேயுள்ள பைங்கநாடு. இவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் மத்திய இணை செயலாளர் என்ற உயர் அரசு அதிகாரியாக இருந்தவர்.
கடந்த 1991-ம்ஆண்டு சென்னையில் தனது தாத்தாகோபாலனுக்கு 80-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டபோது சென்னை வந்திருந்ததாகவும் அங்கு அனைத்து குடும்பத்தினரும் கூடியிருந்தது மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கமலா ஹாரிஸ் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். தற்போது கூகுளில் கமலா ஹாரிஸ் குறித்த தேடல் தான் அதிகரித்துள்ளது. ஒட்டு மொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள கமலா ஹாரிஸ்-க்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து.
kamala harris family : கமலா ஹாரிஸ்!
தமிழகத்தில் கமலா ஹாரிஸ் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். அவருக்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக எம்பி கனிமொழியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“அமெரிக்க அரசியல்வாதி கமலா ஹாரீஸ் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அதிபர் வேட்பாளர் ஜோபிடன் அறிவித்துள்ளது மிகவும் பெருமைக்கொள்ளும் ஒரு விஷயம். கமலாஹரிஸ் இந்திய தமிழ் வம்சாவழியைக் கொண்டவர்.
அவர் பல்வேறு பொறுப்புகளை திறம்பட நிர்வாகிக்கும் திறன் மிக்கவர் என்கிற முறையில், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் அமெரிக்க தேர்தலில் சிறப்பாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்”.
கனிமொழியின் பதிவு:
“முதல் இந்திய செனட்டரான கமலா ஹாரிஸ், அவரது தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்க ஜனநாயகக் கட்சியால் துணை ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டது இது இந்தியர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் தருணம், அவரும் மனம் நிறைந்த வாழ்த்துகள்”.