உத்திரமேரூர் கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் : உத்திரமேரூர் அருகே கலியாம்பூண்டியில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டு மக்களுடன் உரையாற்றினார்.
கமல்ஹாசன் கிராம சபை கூட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு பரப்பி வருகிறார். இந்நிலையில், இன்று காந்தி ஜெயந்தியையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம், கலியாம்பூண்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது 'நான் உங்களுடன் கிராம சபையில் பங்கேற்க வந்துள்ளேன். நான் பங்கேற்கும் முதல் கிராமசபை உத்திரமேரூர் கிராம சபை.
இங்கே மக்களுடன் மக்களாக இருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த ஊர் பிரச்சனையை தெரிந்துக்கொள்ள வந்திருக்கிறேன். கிராம சபை காத்துக்கொண்டு இருக்கிறது' என்றார்.
கிராமசபை செயல்படாததே ஊழலுக்கு காரணம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 'நற்பணிகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதே கிராமசபை கூட்டத்தின் நோக்கம். கிராமசபை கூட்டங்கள் சரிவர செயல்படாததே ஊழலுக்கு காரணம்' என்று குற்றம் சாட்டினார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி அங்கு நடைபெறவிருந்த கிராம சபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கமலின் உடல்நலக் கோளாறால் அவரது வருகை அப்போது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.