ஸ்டெர்லைட் போராட்டம்: கோபமுற்று ரசிகரை திட்டிய கமல்ஹாசன்!

இது என் குடும்பம். நான் அப்படித் தான் அதட்டுவேன்' என்று கமல் சொல்ல, ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த ஆலையை மூடவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகள் நடந்ததால் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அ.குமரெட்டியாபுரம் கிராம பொதுமக்கள் இன்று 49வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொள்ள இன்று தூத்துக்குடி வந்தார். அப்போது ரசிகர்கள் மத்தியில் திறந்தவெளி காரி கமல்ஹாசன் உரையாற்றினார். அவர் பேசுகையில், “மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை. மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை, மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும். குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள்” என்றார்.

கமல்ஹாசன் பேசிக் கொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர் உணர்ச்சி மிகுதியில் ‘தலைவா இங்க கொஞ்சம்’-ன்னு கூச்சலிட, டென்ஷனான கமல்ஹாசன், சும்மா இருங்க.. சும்மா இருங்க… இங்க யாருக்காக பேசிக்கிட்டு இருக்கோம்-னு தெரியாம விளையாட்டு பண்ணிக்கிட்டு இருக்கீங்க?-னு அதட்ட, அந்த ரசிகர், ‘இல்ல போட்டோ எடுக்கத் தான்’ என்று சொல்ல ‘தேங்க்யூ’ என்றார் கமல். மேலும், ‘இது என் குடும்பம். நான் அப்படித் தான் அதட்டுவேன்’ என்று கமல் சொல்ல, சுற்றியிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

இதைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து புறப்பட்டு மற்ற இடங்களுக்கு சென்றார்.

×Close
×Close