Advertisment

'அவர் எதற்கும் பேசுவதில்லை'! - ரஜினியை விமர்சித்துள்ள கமல்ஹாசன்

ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் உட்பட எதிலும் கருத்து சொல்லாமல் இருக்கிறாரே…

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'அவர் எதற்கும் பேசுவதில்லை'! - ரஜினியை விமர்சித்துள்ள கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "எதிர்காலத்தில் ஒரு பகுதியை தீக்கிரையாகி விட்டோம். நிவாரணத் தொகை கொடுப்பதால் பயனில்லை, அவ்வளவு பணம் என்னிடமும் இல்லை. வருங்காலத்தில் மலையேற்றத்தில் முழு பாதுகாப்பு வேண்டும். வானிலை மைய அறிக்கைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். அதைச் செய்தே ஆகவேண்டும். தீர்க்க முடியாத பிரச்சினையாக இதை ஆக்கியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அதைவிட முக்கியமான விஷயம், தமிழர்களுக்கு இருக்கும் தலையாய கடமை தண்ணீரை சேமிப்பதோடு, வீணாக்காமலும் இருக்க வேண்டும்.

‘தலைமை எடுப்பதற்கு நீ யார்’ என்று கேட்பார்கள் இல்லையா? ‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர், தலைவர்’ என்று நான் சொல்லிக் கொள்ளலாம். அது பத்தாது என்று சொன்னால், அதற்கு ஆவன செய்ய வேண்டும். ஆனால் பேசுவோம், பேசுவதில் ஒன்றும் தவறில்லை. இப்போதும் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். என்றைக்காவது நியாயம் கிடைக்கும் என்று என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதற்காக பேசிக்கொண்டே இருந்தால் மட்டும் போதாது, செயல்படவும் வேண்டும்" என்றார்.

மேலும், ‘நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் உட்பட எதிலும் கருத்து சொல்லாமல் இருக்கிறாரே…’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கமல், “பல விஷயங்களில் அவர் அப்படி இருக்கிறார். அதனால், ஒரு விஷயத்தில் மட்டும் நாம் குற்றம் சொல்ல முடியாது” என்றார்.

Cauvery Management Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment