/tamil-ie/media/media_files/uploads/2018/02/a390.jpg)
நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி அரசியலுக்கு வருவதாகவும் தனிக் கட்சி தொடங்கவுள்ளதாகவும் அறிவித்தார். மேலும் அவர் தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து தொடங்க உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், 21ம் தேதி அவர் ராமேஸ்வரத்தில் இருந்து கமல் தொடங்கவுள்ள முதல் அரசியல் பயணம் குறித்த முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
காலை 7.45 மணி: ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் இல்லத்துக்கு கமல் வருகிறார்.
காலை 08.15 மணி: ஏ.பி.ஜே அப்துல் கலாம் பள்ளிக்கு வருகிறார்.
காலை 08.50 மணி: கணேஷ் மகாலில் மீனவர்களை சந்திக்கிறார்.
காலை 11.10 மணி: ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்துக்கு வருகிறார்.
காலை 11.20 மணி: ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில் இருந்து மதுரைக்கு கிளம்புகிறார்.
நண்பகல் 12.30 மணி: ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் பொதுக்கூட்டம்.
பிற்பகல் 02.30 மணி: பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்கு சற்றுமுன் அமைந்த இடத்தில் பொதுக் கூட்டம்.
பிற்பகல் 03.00 மணி: மானாமதுரை ஸ்ரீப்ரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டம்.
மாலை 5 மணி: மதுரை ஒத்தக்கடை மைதானத்திற்கு வருகிறார்.
மாலை 6 மணி: அரசியல் கட்சி கொடி ஏற்றுகிறார்.
மாலை 06.30 மணி: பொதுக்கூட்டம் தொடங்குகிறது.
இரவு 08.10 முதல் 9 மணி வரை: கமல் உரையாற்றுகிறார்.
என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கமல் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.