கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட 3 பேர் பலியான சம்பவம் திரையுலகினரிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக அங்கு நடைபெற்று வந்தது. பிரமாண்டமான வகையில் செட் அமைக்கப்பட இருந்ததால் அதற்கான பணிகளில் இரவு பகலாக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
பலியானவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த விபத்தில் பலியானவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/ERK9ZylVAAAOOQn-1-300x200.jpg)
உதவி இயக்குநரான கிருஷ்ணா மற்றும் படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்களுக்கு உணவு அளித்து வந்த மது, சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலர் காயம் : படுகாயம் அடைந்த, மஞ்சாங், குமார், கலை சித்திரன், குணபாலன், திருநாவுக்கரசு, முருகதாஸ் உள்ளிட்ட 9 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு : இந்த விபத்து தொடர்பாக, கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.