Advertisment

இந்தியன் 2 விபத்து - சம்பவ இடத்தில் படக்குழுவினரிடம் நேரில் விசாரணை

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரிடம் சம்பவ இடத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamalhaasan, indian2, indian 2 accident, director shankar, central crime branch, police, investigation, chennai high court, madras high court,

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரிடம் சம்பவ இடத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சென்னை புறநகர் பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் கடந்த பிப்22-ம் தேதி நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின்போது, கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பாக லைகா படத்தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், இன்று 18ம் தேதி, சம்பவ இடத்தில் இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரிடம் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

கமல் வழக்கு : இந்த விபத்து தொடர்பாக, போலீசார் தன்னை துன்புறுத்துவதாக கமல்ஹாசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில் கமல் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியன் - 2' படத்தின் படப்பிடிப்பு, சென்னை, ஈ.வி.பி., பிலிம் சிட்டியில் நடந்தபோது, 'கிரேன்' விழுந்ததில், உதவி இயக்குனர் உள்ளிட்ட, மூவர் இறந்தனர். இந்த சம்பவத்தினால், நானும், படக் குழுவினரும் நிலைகுலைந்து விட்டோம். நானும், இயக்குனர் சங்கரும், விபத்தில்தப்பினோம். சம்பவ இடத்தில் இருந்து, சில மீட்டர் துாரத்தில் தான் இருந்தோம்.

ஏற்கனவே, இந்த சம்பவத்தினால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். முதலில் நடந்த விசாரணைக்கு, முழுமையான ஒத்துழைப்பு வழங்கி உள்ளேன். அப்படி இருக்கும் போது, படப்பிடிப்பு தளத்துக்கு வர தேவையில்லை. முதல் தகவல் அறிக்கையில், என்னை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

படப்பிடிப்பில் நடந்த விபத்துக்காக, கதாநாயகனை வரவழைப்பது, இதுவே முதல் முறை. விசாரணை என்ற பெயரில், துன்புறுத்தும் நோக்கில், நான் வர வேண்டும் என்கின்றனர். நான் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். என்னை துன்புறுத்தக் கூடாது என, மத்திய குற்றப்பிரிவு சப் - இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

விலக்கு : மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், சதீஷ் பராசரன் ஆஜரானார். போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், முகமது ரியாஸ், ''சம்பவம் நடந்தபோது, கமல் அங்கு இருந்ததால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்,'' என்றார்.இதையடுத்து, 'சம்பவம் நடந்த இடத்துக்கு, கமலை வரவழைக்க கூடாது' என, மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு, நீதிபதி உத்தரவிட்டார். அதேநேரத்தில், புலன்விசாரணைக்காக, சப் - இன்ஸ்பெக்டர் முன் ஆஜராகும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kamalhaasan Director Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment