Advertisment

திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் : கமல் கட்சியின் பெயர் இதுவா?

கமல்ஹாசன் ஆரம்பிக்க போகும் கட்சியின் பெயர் திராவிட மக்கள் முன்னேற்ற கழகம். (தி.ம.மு.க.) என்று சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamal hassan party name

நடிகர் கமல்ஹாசன் இன்று மாலை புதிய கட்சியை ஆரம்பிக்கிறார். அந்த கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மட்டுமன்றி, தமிழக மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்த உடனேயே கட்சியின் பெயர் பற்றி முடிவெடுத்து, தேர்தல் கமிஷனில் பெயரை பதிவு செய்துவிட்டார். கமல் தரப்பில் கேட்டுக் கொண்டதால் அந்த பெயரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

கமல்ஹாசன் ஒரு பேட்டியின் போது தனது கட்சியின் பெயரில் திராவிடம் இருக்கும் என தெரிவித்தார். இன்று மாலை மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கட்சியின் பெயரை அறிவிப்பதற்கு முன்னரே அவரது கட்சியின் பெயர் வெளியாகிவிட்டதாக, சமூக வலை தளங்களில் செய்தி பரவி வருகிறது.

அதாவது கமல்ஹாசன் ஆரம்பிக்க போகும் கட்சியின் பெயர் திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் அல்லது திராவிட மைய முன்னேற்ற கழகம் (தி.ம.மு.க.) என்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் அது உண்மையா இல்லையா என்பதை கமல் தரப்பில் இருந்து இதுவரை யாரும் உறுதி செய்யவில்லை. ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்திக்கும் போது கட்சியின் பெயரை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment