”கௌதமிக்கு சம்பள பாக்கி இருந்தால், என் கம்பெனி பார்த்துக்கொள்ளும்”: கமல் விளக்கம்

”நடிகை கௌதமிக்கு சம்பள பாக்கி இருந்தால், அதனை என் நிறுவன அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்”, என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

”நடிகை கௌதமிக்கு சம்பள பாக்கி இருந்தால், அதனை என் நிறுவன அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்”, என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

துபாயில் நெருங்கிய உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, கடந்த சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். ஆரம்பத்தில், மராடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், ஹோட்டல் குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் நினைவு தவறி விழுந்து இறந்ததாக பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன. மேலும், அவரது உடலில் மது கலந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், குளியல் தொட்டியில் நினைவு தவறி விழுந்து இறந்ததாக அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு 9 மணியளவில் அவரது உடல் மும்பை கொண்டு வரப்படுகிறது.

இருப்பினும், ஸ்ரீதேவி உடல் கொண்டு வரப்படுவதற்கு இரண்டு நாட்களாகவே, பல்வேறு மொழி திரையுலக பிரபலங்கள், அனில் கபூரின் வீட்டுக்கு சென்று, ஸ்ரீதேவியின் மகள்கள் இருவருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர். நேற்றிரவு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் மும்பை சென்று துக்கம் விசாரித்தனர்.

அதன்பின் இன்று சென்னை திரும்பிய கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் விழுப்புரத்தில் தலித் குடும்பம் மீதான தாக்குதல் மற்றும் சிறுவன் படுகொலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “இச்சம்பவம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. அதற்கு ஆவண செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு”, என கூறினார்.

மேலும், சம்பள பாக்கி குறித்து கௌதமி எழுப்பிய விவகாரத்திற்கு பதிலளித்த கமல்ஹாசன், ”நடிகை கௌதமிக்கு சம்பள பாக்கி இருந்தால், அதனை என் நிறுவன அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்”, என கூறினார்.

ஸ்ரீஇதேவி மரணம் குறித்த கேள்விக்கு, “அவருடைய குழந்தைகளை பார்த்து ஆறுதல் கூற சென்றேன். இறந்தவர்களை பற்றி இனி கவலைதான் பட முடியும். அவரது மரணம் குறித்து பேசுவது கஷ்டமாக உள்ளது. நீங்கள் (ஊடகங்கள்) பேசுங்கள்”, என கூறினார்.

சண்டிகரில் தமிழக மருத்துவ மாணவர் கிருஷ்ணபிரசாத் மர்ம மரணம் குறித்து பேசிய அவர், “மாணவர்களுக்கு தற்கொலை செய்யக்கூடாது என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்”, என தெரிவித்தார்.

×Close
×Close