தவறுகளை தட்டிக்கேட்போம் - புதிய தலைமையை உருவாக்குவோம் : கமல்ஹாசன்

Kamalhassan on Subasri death : அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ

Kamalhassan on Subasri death : அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamalhaasan, subasri, banner death, makkal needhi maiam, twitter, video, politics, bureaucrats, subasri death

kamalhaasan, subasri, banner death, makkal needhi maiam, twitter, video, politics, bureaucrats, subasri death, கமல்ஹாசன், சுபஸ்ரீ, சுபஸ்ரீ மரணம், மக்கள் நீதி மய்யம், டுவிட்டர், வீடியோ, அரசியல்வாதிகள், கண்டனம்

தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்திவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக, கமல்ஹாசன், டுவிட்டரில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது : உலகத்தில் கொடுமையான விஷயம், வாழ வேண்டிய பிள்ளைகளின் மரண செய்தியை அவர்களின் பெற்றோர்கள் கேட்பது தான். சுபஸ்ரீயின் மரண செய்தியும் அப்படிப்பட்டது தான். தனது பெண்ணின் ரத்தம் சாலையில் சிந்திக்கிடப்பதை பார்க்கையில் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் திகிலும் பீதியும் ஏற்படும். பெண்ணை, பெண்களை பெற்றவன் என்ற முறையில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. இந்த மாதிரி பல ரகுக்களும், சுபஸ்ரீக்களும் அரசின் அலட்சியத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

Advertisment
Advertisements

கொஞ்சமாவது அறிவு வேண்டாமா? எங்கே பேனர் வைக்கனும், வைக்கக்கூடாது என்று கூடவா உங்களுக்கு தெரியாது. இவர்களைப் போன்ற அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ. எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதும், தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதும் தானே இவர்களுக்கு தெரிந்த அரசியல். இந்த மாதிரி ஆட்சிகள் மீது எனக்கு மயிரிழை அளவு கூட மரியாதையும் பயமும் கிடையாது. ஒருவேளை உங்களுக்கு பயம் இருந்தால் என் கையை பிடித்துக் கொள்ளுங்கள்.

மக்கள் நீதி மய்யம் உங்கள் சார்பாக கேள்விகள் கேட்டும், அதற்கான தீர்வையும் பெற்றுத் தரும். எங்களை ஆள்கிறவர்களை நாங்கள் தான் தேர்வு செய்யனும். ஆனால் நாங்கள் அடிமைகளாக தான் இருப்போம் என கூறினால் அதை விட பைத்தியக்காரத்தனம் எதுவுமே கிடையாது. உங்களை சாதாரண மக்கள்...சாதாரண மக்கள் என்று சொல்லி சொல்லியே என்றும் அடிமையாக வைத்திருக்கிறார்கள். இந்த சாதாரண மக்கள் தான் அசாதாரண தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்பதை நான் தின்னமாக உணர்கிறேன். வாருங்கள் தவறுகளை தட்டிக் கேட்போம். புதிய தலைமையை உருவாக்குவோம்". இவ்வாறு கமல் பேசி உள்ளார்.

Twitter Kamal Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: