தலைமைக்கு தகுதியில்லாதவர் கமல்ஹாசன்! - திவாகரன்

கமல் பதிவுகளே தலைமைக்கு தகுதியில்லாதவர் என்பதை வெளிக்காட்டுகிறது என திவாகரன் பேட்டி அளித்துள்ளார்

சசிகலாவின் தம்பி திவாகரன் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் ஆர்.கே நகர் வெற்றி குறித்தும், தினகரன் மீதான நடிகர் கமல்ஹாசனின் விமர்சனம் குறித்தும் பேசினார்.

தேர்தல் வெற்றி பற்றி பேசிய திவாகரன், ”ஆர்.கே நகர் தேர்தல் மட்டுமில்லை, இந்தியாவில் எந்த இடத்தில் தேர்தலில் நடந்தாலும் நாங்கள் வெற்றிபெறுவோம். எங்களால் எங்கு வேண்டுமானாலும் ஜெயிக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

ஆர்.கே நகர் தேர்தல் வெற்றி பணத்தின் மூலம் வாங்கப்பட்டது என்று நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த திவாகரன் ”கமல் தலைமைக்கு தகுதியில்லாதவர். அவரது ட்விட்டர் பதிவுகளே தலைமைக்கு தகுதியில்லாதவர் என்பதை வெளிக்காட்டுகிறது.” என்றார்.

மேலும் ரஜினி குறித்தும் பேசிய திவாகரன், ”ஜெயலலிதா இல்லாத காரணத்தினாலேயே ரஜினியும், கமலும் பேசுகின்றனர். இல்லையென்றால் அவர்கள் அமைதியாக இருப்பார்கள்” என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். தொடர்ந்து பேசிய திவாகரன்,  ”தினகரன் ஆர்.கே நகர் எம்.எல்.ஏவாக சட்டசபை செல்கிறார். அவர் சட்டசபையில் பொறுமை காக்க வேண்டும் ” என்று குறிப்பிட்டு உள்ளார்.

×Close
×Close