“சினிமாவிலிருந்து அடுத்த முதல்வராக வர தகுதி பெற்றவர்கள், கமல் சாரும், அஜித் சாரும்”: சுசீந்திரன் ட்வீட்

சினிமா துறையில் இருந்து அடுத்த தமிழக முதலமைச்சராக வர தகுதி பெற்றவர்கள் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அஜித் என, இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

director suseenthiran, actor kamalhassan, actor ajith kumar,

சினிமா துறையில் இருந்து அடுத்த தமிழக முதலமைச்சராக வர தகுதி பெற்றவர்கள் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அஜித் என, இயக்குனர் சுசீந்திரன் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் அவருக்கு கந்துவட்டி கொடுமை அளித்ததே அதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, ‘நான் கடவுள்’ திரைப்படம் சமயத்தில் நடிகர் அஜித்தும் அன்புச்செழியனால் இத்தகைய கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளானார் என பரபரப்பு தகவலை அளித்தார். மேலும், நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் அன்புச்செழியனால் கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளானதாக தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துவந்த சுசீந்திரன், இதனை சினிமா துறை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், தன் ட்விட்டர் பக்கத்தில், “சினிமா துறையில் அடுத்த முதல்வராக வருவதற்கு தகுதி பெற்றவர்கள் நடிகர் கமல் சாரும், அஜித் சாரும்”, என சுசீந்திரன் பதிவிட்டுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kamalhassan and ajith are qualified for cm post rom cinema industry director suseenthiran tweets

Next Story
அன்புசெழியன் பெயரைச் சொல்லவே இவ்வளவு பயமா? மழுப்பிய கமல்ஹாசன், விஷால்actor kamal haasan, vishal, gopuram films, anbuchezhiyan, director sasikumar, ashok kumar sucide, ashok kumar letter, company productions
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com