Advertisment

பிறந்தநாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்பு; தி.மு.க.,வுடன் கூட்டணியா? மய்யமாக பதிலளித்த கமல்ஹாசன்

கமல்ஹாசன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துக் கொண்ட அமைச்சர்கள்; தி.மு.க.,வுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் இதுதான்!

author-image
WebDesk
New Update
Kamal haasan's young age workout photos viral, Kamal haasan's fitness photos viral, kamal haasan workout, kamal haasan photos viral in social media, இளம் வயதில் தீவிர உடற்பயிற்சி செய்யும் கமல்ஹாசன், 68 வயதிலும் கட்டான உடற்கட்டுடன் கமல்ஹாசன், இளம் வயதில் தீவிர உடற்பயிற்சி செய்யும் கமல்ஹாசன் வைரல் போட்டோஸ், Kamal haasan, kamal haasan photos viral in social media

கமல்ஹாசன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்துக் கொண்ட அமைச்சர்கள்; தி.மு.க.,வுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் இதுதான்!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் தயாரிக்கும் உபகரணத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இது என் பிறந்த நாள் என்பதை விட முக்கியமான ஒரு நல்ல நாள். இதில் அரசியல், வியாபாரம் கடந்து மனித நேயம் சம்பந்தபட்டது. எல்லா வரம்புகளையும் மீறி நல்லவர்கள் சேர்ந்து செயல்படுத்தும் நல் விழா இது. மனிதம் சார்ந்த பணிகளை முன்னெடுக்க நான் உட்பட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வந்துள்ளனர்.

இந்த வாயு ஜெல் என்ற இயந்திரத்தை ராஜ் கமல் நிறுவனத்தில் கடந்த 2 வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். அந்த நீரை நான் பருகி வருகிறேன். இது ஆரோக்கியமானது. அது இங்கே குழந்தைகளுக்கு பயன்பட வேண்டும் என்று இங்கு நிறுவப்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு வரும்போது இதை பயன்படுத்தலாம். நான் இதை முன் மாதிரியாக செய்கிறேன். இதை விட பன்மடங்கு அரசால் செய்து காட்ட முடியும் என்று நம்புகிறேன். இதை நான் முன்மாதிரியாக செய்வதால், மற்றவர்களும் இதனைப் பார்த்து, பயன்படுத்தி, அனைத்து மருத்துவமனைகளிலும் இதனை நிறுவ என்னை போன்றவர்கள் அரசுக்கு கை கொடுப்பார்கள்.

இந்தக் கருவியைச் செய்தவர்கள் இந்தியர்கள், தமிழர்கள். சென்னை ஐ.ஐ.டி,யில் வடிவமைத்துள்ளனர். இதன்மூலம் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல், மாசில்லா குடிநீரை நாம் அனைவரும் பருக முடியும். இதை முன் மாதிரியாக அரசுக்கு பரிந்துரை செய்கிறேன். இது போன்ற பல இடங்களில் என்னைப் போன்ற மற்றவர்களும் செய்ய வேண்டும். கட்சி சம்பந்தம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தான் இந்த ஏற்பாடு, கமல் பண்பாட்டு மையம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற இயந்திரம் உள்ளது என்று அரசுக்கு பரிந்துரைக்கப்படும் வகையில் முன் முயற்சியாக இதை தொடங்கி இருக்கிறோம்.

இங்கு வந்தவர்கள் எல்லாரும் கட்சி சார்ந்தவர்கள் அல்ல. மனிதம் சார்ந்தவர்கள். மனிதம் தான் இங்கு ஒன்று சேர்ந்துள்ளது. எங்களுக்கு தனி கட்சி உள்ளது. அவர்களுக்கு தனிக் கட்சி உள்ளது. இதில் அரசியல் இல்லை, யாரும் அவர்களுடைய விசுவாசத்தை விட்டுவிட்டு வரவில்லை. எங்களின் நல்லெண்ணம் தான் ஒன்று சேர்த்துள்ளது,என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment